2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அலைபேசி திருடியவர்களுக்கு நஷ்டஈடு செலுத்துமாறு உத்தரவு

Niroshini   / 2016 மே 20 , மு.ப. 06:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நாவிதன்வெளி அண்ணாமலை பிரதேசத்தில் அலைபேசியை திருடிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபர்களை அலைபேசி உரிமையாளருக்கு 05 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், அலைபேசியை உரியவரிடம் ஒப்படைக்குமாறும் கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் நேற்று வியாழக்கிழமை உத்தரவிட்டு, விடுதலை செய்துள்ளார்.

2015ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அண்ணாமலை பிரதேசத்திலுள்ள வர்த்தக நிலையமொன்றில் பொருட் கொள்வனவு செய்யும் போது அலைபேசி காணாமல் போயிருந்தது.

இது தொடர்பாக அலைபேசி உரிமையாளர் சவளக்கடை பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸார் குறித்த அலைபேசி கம்பனி ஊடாக பெற்றுக் கொள்ளப்பட்ட தகவலின் அடிப்படையில் அண்ணாமலை மற்றும் கோட்டைக் கல்லாறு ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 04 இளைஞர்கள் புதன்கிழமை  (18) சவளக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றினால் சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்தனர்.

இவ் வழக்கு விசாரணை கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் ஐ. பயாஸ் றஸாக் முன்னிலையில் நேற்று (19) எடுத்துக் கொள்ளப்பட்ட போது, அலைபேசி உரிமையாளருக்கு 05 ஆயிரம் ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறும், அலைபேசியை உரியவரிடம் ஒப்படைக்குமாறும் உத்தரவிட்டதுடன்,  கடும் எச்சரிக்கை விடுத்து நீதவான் விடுதலை செய்தார்.

 

 

த போது தலா 75 ஆயிரம் ரூபாய் சரீரப் பிணையில் விடுதலை செய்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .