2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'ஆசிரியர்களின் சேவைக்கு தலை வணங்குகின்றேன்'

Niroshini   / 2015 ஒக்டோபர் 07 , மு.ப. 09:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்  

யானைகளின் அச்சுறுத்தலுக்கு மத்தியிலும் கல்வியை கற்பிக்கின்ற ஆசிரியர்களின் சேவைக்கு தலை வணங்குகின்றேன் என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.இராஜேஸ்வரன் பாராட்டு தெரிவித்தார்.

அக்கரைப்பற்று அளிக்கம்பை அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் அதிபர் தேசமான்ய ஸ்ரீ மணிவண்ணன் தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில்,

போக்குவரத்து கஷ்டம், வழியினிலும் பாடசாலையிலும் யானைத் தொல்லை என பல்வேறு இன்னல்களுக்கு மத்தியிலும் தங்களது கடமையை செவ்வனே நிறைவேற்றுகின்ற ஆசிரியர்கள் உண்மையிலேயே போற்றப்பட வேண்டியவர்கள்.

ஆகவேதான், இப்பாடசாலையின் கல்வி வளர்ச்சிக்காக நான் முழு மூச்சுடன் செயற்படுகின்றேன். அதன் ஒரு அங்கமாகவே எனது வேண்டுகோளின் அடிப்படையில் போட்டோ பிரதி இயந்திரத்தை பெற்றுக் கொடுத்துள்ளேன்.

மாகாண சபை உறுப்பினராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் எனது சொந்த நிதியை இப்பாடசாலையின் அபிவிருத்திக்கு பயன்படுத்துவேன் என்றார்.

மேலும், இக்கிராமத்தை பின்தங்கிய கிராமத்தில் இருந்து நவீன கிராமமாக மாற்ற அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனவும் அவர் உறுதியளித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .