2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கல்முனையில் மின் துண்டிப்பு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2020 மார்ச் 08 , பி.ப. 04:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசரத் திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.

நாளை 09ஆம் திகதி திங்கட்கிழமை - கல்முனை, நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 04ஆம், 12ஆம் கொலனி, நிந்தவூர் சில பகுதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல்  மாலை 04.30 மணி  வரையும், மின் தடைப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை  - சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிச்ராபுரம் ஆகிய பிரதேசங்களில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

11ஆம் திகதி புதன்கிழமை - நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மீலாத்நகர், அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

13ஆம் திகதி வெள்ளிக்கிழமை - கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 12ஆம் கொலனி ஆகிய பகுதியில் காலை 08.30 மணி முதல் மாலை 04.30 மணி வரையும், மின் தடைப்படும்.

14ஆம் திகதி சனிக்கிழமை - நிந்தவூர், சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையங்களுக்குட்பட்ட நிந்தவூர், ஒலுவில், பாலமுனை, அட்டாளைச்சேனை, காரைதீவு ஆகிய பகுதிகளில் காலை 08.30 முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

16ஆம் திகதி திங்கட்கிழமை - சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படும்.

17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை - சம்மாந்துறை, கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிஜ்ரா புரம், கல்முனை நகரம், பாண்டிருப்பு, மணல்சேனை, மருதமுனை, பெரியநீலாவணை ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.

19ஆம் திகதி வியாழக்கிழமை - சம்மாந்துறை, சாய்ந்தமருது மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட வங்கலாவாடி, சம்புமடு, ஹிஜ்ராபுரம், காரைதீவு, சாய்ந்தமருது, மாளிகைக்காடு, கல்முனைக்குடி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 வரையும், மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .