2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மாணவர் பயன்பாட்டு செயற்றிட்டம் கையளிப்பு

Editorial   / 2019 நவம்பர் 28 , மு.ப. 11:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்

அக்கரைப்பற்று தேசிய பாடசாலையில், உயர்தர விஞ்ஞானப் பிரிவில் கல்வி பயிலும் மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாணவர் பயன்பாட்டு செயற்றிட்டத்தை, மாணவர் பாவனைக்காகக் கையளிக்கும் நிகழ்வு, பாடசாலை வளாகத்தில் நேற்று (27)  நடைபெற்றது.

பாடசாலையின் விஞ்ஞானப் பிரிவு இணைப்பாளர், ஆசிரியர் ஏ.எல்.எம்.நவாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்லூரியின் அதிபர், மௌலவி யூ.எல்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

இப்பாடசாலையில் தரம்-13 இல் கல்வி பயிலும் விஞ்ஞானப் பிரிவு மாணவர்களால், தரம்-06 முதல் தரம்-11 வரை கல்வி பயிலும் மாணவர்களின் பயன்பாட்டைக் கருத்திற்கொண்டு, மாணவர்களுக்கான விஞ்ஞான, கணித ஆய்வு கூடங்கள், அதனை அண்டிய சுற்றுப்புறச் சூழல்கள் சிறந்த நிலையுடையதாக மாற்றியமைக்கப்பட்டு, அதிபரிடம் கையளிக்கப்பட்டன.

உயர்தர உயிரியல் விஞ்ஞானப் பிரிவு இணைப்பாளர் எம்.மோகன் ராஜ் ஆசிரியரின் வழிப்படுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்ட இந்த விசேட மாணவர் பயன்பாட்டு செயற்றிட்டம், நவீன முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .