2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

'விசர் நாய்க்கடி ஆட்கொல்லியாகும்'

Suganthini Ratnam   / 2015 செப்டெம்பர் 29 , மு.ப. 09:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

விசர் நாய்க்கடி ஒரு ஆட்கொல்லி நோயாகும். இந்த நோயானது ஒருவகை வைரஸின் மூலமாக பாலூட்டிகளில் பரவுகின்றது என ஆலையடிவேம்பு கால்நடை வைத்திய அதிகாரி எம்.ஐ.றிப்கான் தெரிவித்தார்.

உலக விசர்நாய்க்கடி நோய் தினத்தினை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் வலயத்துக்குட்பட்ட பனங்காடு பாசுபதேசுவரர் வித்தியாலயத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வில் அவர் இவ்வாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'விசர் நாய்க்கடி நோய்த் தொற்றுக்குட்பட்ட நாய் கடிப்பதால் மனிதனுக்கும் இந்நோய் ஏற்படுகின்றது.

மேலும்; நீங்கள் வீடுகளில் செல்லப்பிராணியாக வளர்க்கும் நாய்களுக்கு தடுப்பூசிகளை வழங்குவதன் மூலம் நாய்களுக்கு விசர் ஏற்படாமல் தடுக்க முடியும்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .