2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தென்கிழக்கு பல்கலைக் கழகத்தின் புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் டிசம்பர் 13 இல் ஆரம்பம்

Super User   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 08:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஆர்.அஹமட்)

இலங்கை தென்கிழக்கு பல்கலைக் கழகத்திற்கு 2009/2010 கல்வியாண்டுக்காக தெரிவு செய்யப்பட்ட கலைஇ வர்த்தகஇ இஸ்லாமிய கற்கை நெறிகளுக்குரிய புதிய மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள் 2010 டிசம்பர் 13 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவிருப்பதாக பல்கலைக்கழக பதிவாளர் எச்.அப்துல் சத்தார் தெரிவித்தார்.

கலை கலாசார பிரிவுக்கு 167 மாணவர்களும் முகாமைத்துவ வர்த்தக பிரிவுக்கு 244 மாணவர்களும் இஸ்லாமிய கற்கை நெறிகள் மற்றும் அரபு மொழிக்கு 164 மாணவர்களும் தெரிவு செய்யப்பட்டிருப்பதாககவும் அவர் தெரிவித்தார்.

அன்றைய தினம் உபவேந்தர் எஸ்.எம்.எம். இஸ்மாயில் தலைமையில் கூட்டமென்றும் நடைபெறவிருக்கின்றது. இதில் மாணவர்கள், பெற்றோர்களுக்கு பல்கலைக்கழகத்தின் நடைமுறைகள் பற்றி விளக்கப்படவிருப்பதாக பதிவாளர் சத்தார்  குறிப்பிட்டார்.

இதேவேளை, ஒலுவில் வளாகத்தில் விடுதி வசதி கிடைக்கப்பெற்ற மாணவர்கள் டிசம்பர் 12 ஆம் திகதி பிற்பகல் 5 மணிக்கு முதல் ஒலுவில் வளாகத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென அவர் மேலும் தெரிவித்தார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .