2024 மே 02, வியாழக்கிழமை

யுத்தத்தைப் போன்று சிறுவர் துஷ்பிரயோகத்தையும் முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை

Super User   / 2010 ஒக்டோபர் 12 , பி.ப. 12:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

(யூ.எல்.மப்றூக்)

நமது நாட்டில் நிலவிய யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்ததைப் போன்று, சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகங்களையும் முடிவுக்குக் கொண்டு வருவதற்காக பொலிஸார் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் என  கல்முனை பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.முகம்மது சதாத் தெரிவித்தார்.

கல்முனை கல்வி மாவட்டத்திலுள்ள 35 சிறுவர் பகல் பராமரிப்பு நிலையங்களும், 08 சிறுவர் இல்லங்களும் இணைந்து நடத்திய உலக சிறுவர் தினத்தைக் கொண்டாடும் வைபவம் அண்மையில் கல்முனை கிறிஸ்டா மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சிறுவர்கள் மீதான துஷ்பிரயோகம் என்பது அனுமதிக்கப்பட முடியாதது. சிறுவர்களுக்கும் சுதந்திரம்  மற்றும் கனவுகள் இருக்கின்றன. அவற்றை நாம் அங்கீகரித்தல் வேண்டும்.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பகுதிகளில் சிறுவர் துஷ்பிரயோகங்கள் அதிகரித்துள்ளன. இதற்கு பிரதான காரணம் ஒழுக்கமும் கல்வியறிவும் இல்லாமையே சிறுவர் துஷ்பிரயோகம் இடமபெறுவதற்கு முக்கிய காரணங்களாகும்.

சிறுவர்களுக்கும் விருப்பு வெறுப்புகள் உள்ளன. அவைகளை நாம் மதிக்க வேண்டும். ஆனால், இன்று அதிகமான பெற்றோர்கள் சிறுவர்களின் விருப்பு வெறுப்புகளுக்கு இடங்கொடுப்பதில்லை.

பெற்றோர் தமது ஆசைகளையும், கனவுகளையும் தமது குழந்தைகள் மீது திணிக்கின்றார்கள். இது கூடாது. தமது குழந்தைகள் வைத்தியர்களாகவும், பொறியியலாளர்களாகவும் வரவேண்டுமென்று பெற்றோர்கள் விரும்புகின்றார்கள். அது தவறில்லை. ஆனால், அந்த பாரங்களை குழந்தைகளால் சுமக்க முடியுமா என்பதையும் ஒரு கணம் யோசித்துப் பார்க்க வேண்டும்.

மேலு, குழந்தையின் ஆசை என்ன என்பதையும் நாம் அறிதல் வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம் என்றால், பாலியல் ரீதியாக சிறுவர்களைப் பயன்படுத்துதல் அல்லது சிறுவர்களைச் சித்திரவதை செய்தல் என்றுதான் இன்று பலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால், சிறுவர்களை உளரீதியாக நோவினை செய்வதும் கூட சிறுவர் துஷ்பிரயோகம்தான் என்பதையும் நாம் மனதில் வைத்துக் கொள்தல் வேண்டும்.

சிறுவர்களுக்கு சமய ரீதியான அறிவினையும், நல்ல கல்வியையும் வழங்கும் போது, அவர்கள் தானாகவே நல்ல பிரஜைகளாக வளரத் தொடங்குவார்கள். ஒரு குழந்தையை நல்ல பிரஜையாக உருவாக்குவதில் பெற்றோருக்கு பெரும் பொறுப்புகள் இருக்கின்றன. அவைகளை பெற்றோர்கள் தவறவிடக் கூடாது என்றார் அவர்.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .