2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் விஜயம்

Suganthini Ratnam   / 2011 ஜூன் 19 , மு.ப. 05:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ.அஸீஸ் நேற்று சனிக்கிழமை அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலைக்கு விஜயம் செய்தார்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையில் இரண்டு மாடிகளைக் கொண்ட நோயாளர் விடுதியொன்றினை அமைப்பதற்கான இடத்தினை அடையாளம் காணும் பொருட்டே இவரது விஜயம் அமைந்திருந்தது.
 
செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ் விடுத்த வேண்டுகோளுக்கிணங்க கிழக்கு மாகாண சுகாதார, விளையாட்டு மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் எம்.எஸ். சுபைர் மேற்படி இருமாடிக் கட்டிடத்துக்காக 12 மில்லியன் ரூபா நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கான தேவைப்பாடுகள் குறித்து செயலாளர் அஸீஸிடம், வைத்திய அதிகாரி டொக்டர் அப்துல் சகாப் எடுத்துக் கூறினார்.

அட்டாளைச்சேனை வைத்தியசாலையின் நவீன பற்சிகிச்சைப் பிரிவினையும் செயலாளர் அஸீஸ் இதன்போது பார்வையிட்டார்.

இவரது விஜயத்தின்போது கிழக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் டொக்டர் எம். தேவராஜா, இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளரும் அட்டாளைச்சேனை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் உதவித் தலைவருமான எஸ்.எல்.எம். ஹனீபா, வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவின் தலைவர் ஐ.எல். இப்றாலெப்பை, செயலாளர் ஏ.சி. நகீப், உப செயலாளரும், அதிபருமான எம்.ஐ.எம். றியாஸ் மற்றும் அபிவிருத்திக் குழு உறுப்பினரும் அதிபருமான ஏ.எல்.கே. முஹம்மட் உள்ளிட்ட பலர் சமூகமளித்திருந்தனர்.


You May Also Like

  Comments - 0

  • IBNU ABOO Monday, 20 June 2011 02:45 AM

    அட்டாளைச்சேனை வைத்தியசாலைக்கு இப்போதுதான் அரசாங்க ஆதரவு கதவு திறந்துள்ளதா. இதில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சமூக நலன் கொண்டவர்கள்.

    Reply : 0       0

    Ansar Monday, 20 June 2011 10:49 AM

    more to do. upgrade as a base hospital and relocate to pavankai road i think mr azeez can do it with his ministers full suport.

    Reply : 0       0

    haha Tuesday, 21 June 2011 02:54 PM

    Is there any hospital in Addalaichenai???!!!!!!!! where is it?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .