2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதை அனுமதிக்க முடியாது: ரவூப் ஹக்கீம்

Menaka Mookandi   / 2011 செப்டெம்பர் 20 , மு.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

'சர்வதேசம் எங்களோடு இருக்கின்றது என்கிற ஆர்ப்பரிப்பும், இறுமாப்பும், ஆணவமும், கர்வமும் தமிழ்த் தலைமைகளின் கண்களை மறைக்கின்றன. அதனால், முஸ்லிம் சமூகம் முன்வைக்கின்ற நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை உணர்ந்து கொள்வதற்கு மறுக்கின்றனர். முஸ்லிம் சமூகத்தின் கோரிக்கைகளை சகோதர இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் குறுக்கே நிற்காமல்தான் முஸ்லிம் காங்கிரஸ் பேசி வருகிறது.

இந்த நாட்டிலே அரசியல் தீர்வின் போதும், அதிகாரப் பகிர்வின் போதும் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதையோ, புறக்கணிக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது' என்று மு.கா. தலைவரும் நீதியமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

மருதமுனை பிரதான வீதி அருகாமையில் நேற்று திங்கட்கிழமை இரவு கல்முனை மாநகரசபைத் தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு கூறினார். அக்கூட்டத்தில் ஹக்கீம் மேலும் தெரிவித்ததாவது,

'இனப் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுக்கொள்ளும் வகையில் அரசாங்கத்துடனான பேச்சு வார்த்தையினை மீண்டும் தொடங்குங்கள் என்று சர்வதேசம் கூறிவிட்டது என்று - தமிழ் சமூகத்தினர் பெரிய கொண்டாட்டத்தில் இருக்கின்றார்கள். சர்வதேசமானது தம்மை மட்டும் நோக்கிக் கூறியதொரு விடயமாக தமிழ் சமூகத்தினர் இதைப் பார்க்கிறார்கள்.

1977ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத் தேர்தலில் மறைந்த எமது தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப், முஸ்லிம் ஐக்கிய விடுதலை முன்னணி எனும் அமைப்பை உருவாக்கி, அமிர்தலிங்கத்தின் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்து தனித் தமிழ் ஈழத்துக்காக அர்ப்பணிப்புடன்  களமிறங்கினார். ஆனால், அதை இன்று தமிழ்த் தலைமைகள் மறந்து விட்டன.

தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் 1977ஆம் ஆண்டு இணைந்து போட்டியிட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் எல்லோரும் தோல்வியடைந்தனர். ஆனால், தமிழர் விடுதலைக் கூட்டணி 17 ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றியடைந்தது. தமிழ் தரப்புக்கு நாடாளுமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் பதவி கிடைத்தது. முஸ்லிம்கள் தோற்று தமிழர் விடுதலை முன்னணியை வெற்றி பெறச் செய்தனர். இதற்கு வித்திட்டவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆவார்.

ஆனால், இப்போது தமிழ் சமூகம் தங்களுக்கு ஏதாவது கிடைக்கலாம் எனும் நிலையொன்று வரும் போது – முஸ்லிம் சமூகத்தை புறந்தள்ளி விட நினைத்தால் அதற்கு நிச்சயம் நாம் பதிலடி கொடுப்போம். தமிழர்களுக்காக முஸ்லிம் சமூகம் சாமானியமான தியாகங்களைச் செய்யவில்லை என்பதை தமிழ் தேசிய தலைமைகளிடம் நாம் ஞாபகப்படுத்தியிருக்கின்றோம்.

தமிழர் விடுதலைக் கூட்டணியினர் 1977ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது வெளியிட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் - 'அமையப் போகின்ற தமிழ் ஈழத்தில் முஸ்லிம்களுக்கான சுயநிர்ணய உரிமையினை நாம் அங்கீகரிக்கின்றோம்' எனக் கூறப்பட்டிருந்தது. அது மட்டுமன்றி, 'அமையப் போகின்ற தமிழ் தேசத்தில் தமிழர்களோடு சேர்ந்து வாழ முஸ்லிம்கள் விரும்பவில்லையென்றால் நீங்கள் பிரிந்து உங்களுடைய பிரதேசங்களை ஆளலாம். அதற்கு நாம் அங்கீகாரம் தருவோம்' என்று சாய்ந்தமருது கடற்கரையில் அப்போது இடம்பெற்ற தேர்தல் பிரசார மேடையில் தமிழ் தலைமைகள் வாக்குறுதியளித்தன.

ஆனால், இப்போது எல்லாவற்றினையும் மறந்து விட்டார்கள். தமிழர் விடுதலைக் கூட்டணியின் வெற்றிக்காக 1977ஆம் ஆண்டு தேர்தலின் போதுஅஷ்ரப் ஆற்றியிருந்த பங்களிப்பு மகத்தானது. தமிழ் பிரதேசங்களான பாண்டிருப்பு, நீலாவணை போன்ற பகுதிகளில் அஷ்ரப் பிரசாரக் கூட்டங்களை நடத்தினார். அப்போது, 'தமிழ் ஈழத்தினை தந்தை செல்வா பெற்றுத் தராவிட்டால், அதை நான் பெற்றுத் தருவேன்' என்று தைரியமாக முதுகெலும்பை நிமிர்த்திப் பேசினார். ஆனால், இன்றைய தமிழ்த் தலைமைகள் இதை மறந்து விட்டன.

இவை மட்டுமல்ல, இணைந்த வடக்கு – கிழக்கு மாகாணமானது முஸ்லிம் சமூகத்துக்கு ஆபத்தாக அமைந்து விடும் என்று அப்போதைய அரசாங்கத்தில் அங்கம் வகித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் முஸ்லிம்களை அச்சமூட்டி எச்சரித்தனர்.  வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை அப்போதைய அரசு திருப்பி விடக்கூடிதொரு நிலைவரமும் இருந்தது. அந்த நிலையில், மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்கள் இது விடயத்தில் சாணக்கியமானதொரு நிலைப்பாட்டினை எடுத்தார்கள். அதன் மூலமாக அஷ்ரபின் பரிமாணத்தை நாம் கண்டு வியந்தோம்.

அதாவது, வடக்கு – கிழக்கு இணைப்புக்கு எதிராக கூச்சல்கள் எழுந்த போது, இணைந்த வடகிழக்கு மாகாணத்துக்கு எதிராக முஸ்லிம்களை அரசாங்கம் தூண்டி விடக்கூடிய ஆபத்துக்கள் உருவாகியிருந்த போது, அதைத் தடுப்பதற்காக அஷ்ரப், முஸ்லிம் மாகாணக் கோரிக்கையினை முன்வைத்தார். வடக்கு – கிழக்கு இணைப்பு என்கிற தமிழ் மக்களின் அபிலாசைகளுக்கு முஸ்லிம்களால் குந்தகங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக முன்வைக்கப்பட்டதே, அஷ்ரஃப் அவர்களின் முஸ்லிம் மாகாணக் கோரிக்கையாகும். ஆனால், தமிழ் சமூகத்தினர் இதை மறந்து விட்டுப் பேசிக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம் மாகாணக் கோரிக்கை மூலமாக அஷ்ரப்; மிகப்பெரும் விபரீதத்தைச் செய்ததாக – அர்த்தம் புரியாமல், தூரநோக்கில்லாமல், சாணக்கியமில்லாமல் அஷ்ரப்பினை சாட நினைத்தார்கள். அதேபோலவே, இன்று முஸ்லிம் காங்கிரசையும் சந்தேகத்தோடு பார்க்கிறார்கள். அரசின் அடிவருடிகள் போல் எங்களை நோக்குகின்றனர்.

சர்வதேசம் எங்களோடு இருக்கின்றது என்கிற ஆர்ப்பரிப்பும், இறுமாப்பும், ஆணவமும், கர்வமும் தமிழ்த் தலைமைகளின் கண்களை மறைக்கின்றன. அதனால், முஸ்லிம் சமூகம் முன்வைக்கின்ற நியாயமான அடிப்படைக் கோரிக்கைகளை உணர்ந்து கொள்வதற்கு மறுக்கின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸ் பொறுப்புணர்வுடனேயே பேசுகின்றது. நாங்கள் என்றுமே நேர்மை தவறாமல், சகோதர இனங்களின் அரசியல் அபிலாசைகளுக்குக் குறுக்கே நிற்காமல் எங்களுடைய இலக்குகளைப் பற்றிப் பேசி வருகின்றோம். இந்த நாட்டிலே அரசியல் தீர்வின் போதும், அதிகாரப் பகிர்வின் போதும் முஸ்லிம் சமூகம் ஒடுக்கப்படுவதையோ, புறக்கணிக்கப்படுவதையோ ஒருபோதும் அனுமதிக்க முடியாது என்றார்.

இந்தக் கூட்டத்தில் அம்பாறை மாவட்ட மு.கா. நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ், கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஏ.எம். ஜெமீல், கே.எம். ஜவாட், அட்டாளைச்சேனை பிரதேசசபைத் தவிசாளர் ஏ.எல்.எம். நசீர் மற்றும் கல்முனை மாநகரசபைத் தேர்தலுக்கான மு.காங்கிரசின் முதன்மை வேட்பாளர் நிசாம் காரியப்பர் உள்ளிட்ட வேட்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0

  • Rizadh SMT Tuesday, 20 September 2011 10:20 PM

    ஐயா .... கிரீஸ் மர்ம மனிதர்களப் பற்றி கொஞ்சம் சொல்லுங்களன் ??

    Reply : 0       0

    amjadh Monday, 26 September 2011 08:25 PM

    இவங்கள் எல்லோரும் இப்படித்தான்.

    Reply : 0       0

    xlntgson Wednesday, 21 September 2011 09:39 PM

    SLMC முஸ்லிம் காங்கிரஸ் NUA தேசிய ஒருமைப்பாடு பற்றி பேச இயலாது என்று அஷ்ரப் காலத்திலேயே தமிழ் கட்சிகளும் சிங்கள கட்சிகளும் கூறின. அவ்வாறு பேசுவது முஸ்லிம் agenda அரசியலை எங்கும் பரத்தும் எண்ணம் என்று சந்தேகிக்கப்பட்டது. புலிகளோடு அரசு பேசிய போது முஸ்லிம் விவகாரம் குறித்து மட்டுமே இவர்கள் பேச இயலும், தேசப்பொது விடயங்கள் சிங்கள மற்றும் அரசின் உடைமை என்று கூறப்பட்டது.
    பேசி வேலை இல்லை!
    தலையோ தலைமையோ அங்கீகரிக்கப்பட்டால் தானே? இப்போது பிரதேசவாதம் தலைதூக்கி இருக்கிறது முஸ்லிம் காங்கிரஸ் பல துண்டுகளாக....

    Reply : 0       0

    Ramzan Wednesday, 21 September 2011 09:01 PM

    இன்று இன விரோதம் காட்டி, யாழ்ப்பாணத்திலோ காத்தன்குடியிலோ நடந்தது பற்றி பேசிக் காலம் வீனடிக்க வேண்டாம். இறுதியாக நடந்த கிறீஸ் மனிதன், சியாரம் உடைப்பு இவற்றிற்கான தீர்வு, இவைகள் நடந்தபின்னும் அமைச்சுப் பதவிக்கு ஆசைப்பட்டு நடந்தவைகளுக்கு காலம் தாழ்த்தி, வாக்கு வேட்டைக்கு விளக்கம் கொடுத்,து இருக்கும் தமிழ் முஸ்லிம் மக்களின் உறவையும் கெடுத்து விடாதிங்க. மறைந்த தலைவர் மாமனிதர் எங்களுக்கு கற்றுத்தந்த பாடம் அது.

    Reply : 0       0

    Hameed faleel Wednesday, 21 September 2011 07:11 PM

    i wish leader can read all this comments so he can understand what the public think of his leadership and the way of his party traveling. he will be seeing in public during any election after that no one can see him only rich fighters can meet him. poor leadership. and About mr. haris MP. there is no betterment for any one by him useless talking about him we understand after elected him as our Representative.

    Reply : 0       0

    Riyal A.M Wednesday, 21 September 2011 04:45 PM

    அப்பாடா... இப்பதான் நம்மட தலைவருக்கு முஸ்லிம்களை பற்றி கவனம் வந்திருக்கு ... இப்ப எந்த பத்திரிகைகளை பார்த்தாலும் நம்ம தலைவர்ர பேச்சுதான் வருது... ஒக்டோபர் 8 க்கு பிறகு தலைவர காணுவது கஷ்ட்டம் .

    Reply : 0       0

    Hot water Wednesday, 21 September 2011 05:42 AM

    முஸ்லிம் அரசியல்வாதிகள் பலர் மௌனமாக பதுங்கிக் கொண்டிருக்க, அமைச்சர் ஹக்கீம் குரலாவது கொடுக்கிறார். அதை பாராட்டாமல் எதிர்ப்பது சிறந்தததல்ல.

    Reply : 0       0

    faizal basha Wednesday, 21 September 2011 02:58 AM

    முஹம்மத் ஹிரழ் சென்னது மிஹ பொரிய உண்மைகள். செலபேருக்கு புரிவது கஷ்டம்.
    பாவம் மக்கள் இன்னுமா புரியலா.

    Reply : 0       0

    mca fareed Wednesday, 21 September 2011 02:23 AM

    நேற்று ஏச்சு, இன்று பக்கத்தில் நீலம். இது ஒரு புது மொழி, கண்டுபிடித்தால் பரிசு கிடையாது.

    Reply : 0       0

    Wijay Wednesday, 21 September 2011 01:30 AM

    மக்களை நன்றாகத் தூண்டி விடுகிறார். நிறைய ஓட்டு வாங்கலாம்.

    Reply : 0       0

    Mohammed Hiraz Wednesday, 21 September 2011 01:02 AM

    இங்கே கருத்தெழுதும் தமிழர்கள் ஒரு உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்!!! பொதுவாக இலங்கையில் தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் எந்த உறவோ ஒற்றுமையோ இதுவரை வரலாற்றில் இருந்ததே இல்லை என்பதை. இதனாலேயே யாழ்ப்பான முஸ்லிம்களின் வெளியேற்றத்தை எந்த ஒரு தமிழ் சக்தியும் கண்டிகாமல் மௌனித்து ஆதரவு அளித்தனர். அது போன்றே காத்தான்குடி பள்ளிவாயல் படு கொலைகளும் மேலும் புலிகளால் சகல கொடுமைகளுக்கும் தமிழ் தரப்பின் எந்த ஒரு இடத்தில் இருந்தும் இதுவரை பகிரங்க மன்னிபோ அதற்குரிய நிவாரனங்களோ வழக்கப்படவில்லை.

    இதை பற்றி பேசினால் முஸ்லிம் ஊர்காவல் படை வீரர்கள் தமிழர்களுக்கு செய்த அட்டகாசத்திற்கே இதெல்லாம் நடந்தது என்று நியாயம் பேசவருவர். அரச படையும் அரச நிர்வாகமும் எந்த இனமாக இருந்தாலும் அவர்களின் தவறுகளுக்கு சம்மந்த பட்ட இனம் பொறுபேற்க முடியாது என்பதையும் சம்மந்த பட்ட இனத்தை பழிவாங்கும் செயலில் ஈடுபடுவதும் முட்டாள் தனமானது என்று புரியாமல் இருப்பது வேடிக்கை. ஆனால் சிங்கள இனம் அப்படி அல்ல. மாவனெல்லையில் களவரம் நடந்த போது அது முழு தென்னிலங்கையையும் பாதிக்கவில்லை அத்தோடு அந்த களவரத்தில் பாதிக்க பட்ட முஸ்லிம்களின் மறு வாழ்வுக்கு கோடி கணக்கில் சிங்கள மக்களே உதவி செய்தனர். இலங்கையில் தமிழர்களுக்கு நீதியும் உரிமையும் வேண்டுமெனில் அவர்கள் சொந்த மொழியை பேசும் முஸ்லிம்களின் உரிமையையும் நீதியையும் நிலை நிறுத்த முன் வர வேண்டும் அப்போதுதான் தமிழர்களுக்கு நீதி நிச்சயம்இ ஏனெனில் முழு உலகமும் தமிழர் பக்கம் நின்றாலும் முஸ்லிம்களின் மனம் வெல்ல படும் வரை தமிழர் கனவு பலிக்காது அது எப்போதும் பூஜியமாகவே இருக்கும். மூதூருக்கு கைவைத்ததாலேயே புலிகள் அழிந்தார்கள் என்பது எல்லோருக்கும் ஞாபகம் இருக்கட்டும்!!!

    Reply : 0       0

    rozan Wednesday, 21 September 2011 12:23 AM

    எங்க யா இப்படியான வித்தை எல்லாம் கற்று இருக்கிறீங்க.....???

    Reply : 0       0

    poraali Wednesday, 21 September 2011 12:22 AM

    கிரீஸ் மனிதன் பற்றி பேசி இருப்பார் ஆனா....அப்போ தேர்தல் இல்ல....இப்ப தேவ இல்லாததை எல்லாம் பேசுகிறார்....

    Reply : 0       0

    neethan Tuesday, 20 September 2011 11:43 PM

    அரசுடன் இணைந்துள்ள நீங்கள் சிறுபான்மை மக்களின் விடயமாக அரசுக்கு எப்போதாவது அழுத்தம் கொடுத்தீர்களா? ஒ பிலேக் வந்தபோது அவரிடமாவது பேசுவதற்கு அரசு உங்களை அழைத்ததா? ஏன் தமிழ் தலைமைகளின் இறுமாப்பு, ஆணவம் என காட்டமான வார்த்தைகளை பயன்படுத்துகிறீர்கள்? ஒரு மொழி பேசும் இரு இனங்களுக்கிடையே இணக்கப்பாடு இல்லாமல் எப்படி பேரினவாதிகளுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த முடியும்?

    Reply : 0       0

    sufsuf Tuesday, 20 September 2011 11:09 PM

    வந்துவிட்டார் வாக்கு வேட்டைக்கு வாரத்தை ஜாலங்கள் புரிவார். வெற்றி பெற்றால் அத்துடன் எல்லாம் முடிந்துவிடும். அலட்டிக்கொள்ள தேவை இல்லை.

    Reply : 0       0

    meenavan Tuesday, 20 September 2011 10:58 PM

    பச்சை, மஞ்சள் சால்வை கிடைக்காததினால் நீல சேர்ட் அணிந்து உள்ளாரோ? அல்லது நீல பக்கம் சேர போகிறேன் என தலைவருக்கு சிக்னல் காட்டுகிறாரோ?

    Reply : 0       0

    Nesaji Tuesday, 20 September 2011 03:49 PM

    1977 ல்; தமிழர் கூட்டணி வெற்றிபெற்ற பிறகு தமிழ் ஈழத்துக்காக போராடவில்லை.
    அன்றைய த .வி.கூ. செல்வநாயகத்தினுடையது. இன்றையது ஆனத சங்கரியுடையது. அன்றைய முஸ்லிம் காங்கிரஸ் அஷ்ராபுடையது . இன்றையது ஹகீமுடையது. இவைகளை ஒன்றோடொன்று ஒப்பிடாதீர்கள்.

    Reply : 0       0

    M H Tuesday, 20 September 2011 10:10 PM

    பள்ளி உடைக்ககிறார்கள். அதை பேச வக்கில்லை. தலைவரா இவர்?

    Reply : 0       0

    Whistle Blower Tuesday, 20 September 2011 10:09 PM

    சரியாக சொன்னீங்க சதாத்.

    Reply : 0       0

    pasha Tuesday, 20 September 2011 09:56 PM

    ah Siraj, தலைவருக்கு வக்காலத்து. தப்பு நடக்கும் விடயத்தை கண்டிப்பது என்றால் எல்லா தப்பையும் கண்டிக்க வேண்டும். அனுராதபுர பள்ளி உடைப்பு பற்றி வாய் திறக்கவும் இல்ல.

    Reply : 0       0

    sadath Tuesday, 20 September 2011 09:18 PM

    முனாபிக் வந்துடாரு, ஏன் இந்த பொழப்பு, கொள்ளுபிடியில இருக்கிற ஐஸ் கிரீம் கடையே நடத்தி எதாவது பண்ணுங்க, தமிழ் முஸ்லிம் உறவே நாங்க பாக்கம்.

    Reply : 0       0

    siraj Tuesday, 20 September 2011 08:59 PM

    சிலர் இங்கு ஏதோ உளம்புவது நல்லா தெரியுது. சாப்பிட்டாயா என்று கேட்டால், மாடு மேய்க்க போக வில்லை என்று பதில் கொடுப்பது போல் இங்கு சில ஆசாமிகளின் கொமண்ட் உள்ளது.
    ரவூப் ஹக்கீம் இங்கு கொமண்ட் பன்னும் சில்லறைகளுகு பதில் கொடுக்கும் எந்த தேவையும் இல்லை. ஆனால் ஒரு போதும் சிங்களவர்களையோ தமிழர்களையோ ஏசிப் பேசவில்லை
    மாறாக தப்பு நடக்கும் விடயத்தினை கண்டிப்பதுதான் அவரின் செயலாக அமைந்தது.

    Reply : 0       0

    Whistle Blower Tuesday, 20 September 2011 08:38 PM

    மறைந்த தலைவரின் குரலை பழகி ஏமாற்ற தொடங்கி இருக்கிறார். தனக்கு வாசான குறிப்பிட்ட சிலரை வைத்து கொண்டு வியாபாரம் நடத்துகிறார் , இவரை ஊர் மக்கள் அழைத்து விசாரிக்க வேண்டும் , எந்த அடிப்படையில் தேர்தலில் வேட்பாளர்களை தெரிந்தீர்கள்?'

    Reply : 0       0

    uooran Tuesday, 20 September 2011 07:53 PM

    தல, கிரீஸ் மனிசன பத்தி சொல்லுங்களேன்.

    Reply : 0       0

    Nirmalalraj Tuesday, 20 September 2011 07:50 PM

    இப்போது தானும் அரசாங்கத்தில் அங்கமாக இருப்பதால் இம்முறை அராசங்கத்தை எதிர்த்து பேச முடியாது. அதுதான் தமிழ் தலைவர்களை இம்முறை குறிவைத்திருக்கிறார். தமிழ் முஸ்லிம்களுக்கிடையில் கொஞ்சமாவது ஒற்றுமையை கட்டியெழுப்ப உதவக்கூடிய முஸ்லிம் கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் பார்க்கப்பட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு வைக்க கிளம்பியாச்சு. போல. அரசியலில் வங்குறோத்தாகும் எல்லா அரசியல்வாதிகளுமே தூக்கிப்பிடிக்க நினைப்பது இனவாதத்தைதான். அது எல்லா இனத்து அரசியல்வாதிகளும் பொருந்தும்.

    Reply : 0       0

    krish Tuesday, 20 September 2011 07:39 PM

    முதல் தேர்தலில் பேசிப் பேசி சிங்களவர்களை முஸ்லிம்களுக்கு எதிரி ஆக்கினார் இப்போ தமிழர்களையும் எமக்கு எதிரிகளாக ஆக்கும் கைங்கர்யத்தில் தல இறங்கிட்டு. காங்கிரஸ்ல நாயை கட்டினாலும் வெல்லும் என்கிறத எங்கட சனங்க எப்போ மாத்த போறாங்க.

    Reply : 0       0

    Ameer MY Tuesday, 20 September 2011 07:28 PM

    நம்ம உறுப்பினர் நீல உடுப்புடன் இருக்காரு ??????????????????

    Reply : 0       0

    Rajani Tuesday, 20 September 2011 06:57 PM

    இப்போது இவர்களுக்கு பேசுவதற்கு ஒண்ணுமே இல்லை. அதனால் தமிழர்களை குறி வைத்திருக்கிறார்கள். தமிழன் இங்கு வாழக்கூடாது என்பதுதான் இவர்கள் கொள்கை.

    Reply : 0       0

    AJMAL From thambala Tuesday, 20 September 2011 06:55 PM

    மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு தல காலத்துக்கு தேவையான கருத்தை முன்வைத்துள்ளார்.. இனியாவது இவருக்கு காலம் பிறக்கட்டும்....வாழ்த்துக்கள்.......

    Reply : 0       0

    pasha Tuesday, 20 September 2011 06:05 PM

    தலைவர் வந்துட்டார் ஆவேசமாய் பேசி வாக்கு கறக்க. அவருக்கு தெரியும் எங்கே அடித்தால் கல்முனை மக்கள் பணிவார்கள் என்று.

    Reply : 0       0

    Anwer Noushard Tuesday, 20 September 2011 03:55 PM

    தலைவர் அவர்களின் கருத்துக்கள் மிக அனுபவ அரசியலின் அடிப்படை நல்ல கருத்துக்கள். இருப்பினும் தாங்கள் அரசியலில் தேர்தல் காலத்தில் மாத்திரமே மக்களை சந்திப்பது போராளிகளை வெறுப்புக்குள்ளக்கி இருக்கின்றது. கட்சியில் பணக்காரர்கள் அல்லது பணக்காரர்களாக்கப்பட்டவர்கள் முன்னின்று திட்டம் வகுப்பது இளையோருக்கும் ஏழைகளுக்கும் பொருத்தமாக இல்லையே. உங்களின் நல்ல திட்டங்களும் இதனால் பிழையாக அல்லவா விமர்சிக்கப்படுகிறது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .