2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கான தேர்வு குறித்து அதிருப்தி

Super User   / 2011 செப்டெம்பர் 27 , பி.ப. 02:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(ஹனீக் அஹமட்)

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்காக அம்பாறை மாவட்டத்தில் கவிதை துறையில் தெரிவு செய்யப்பட்டுள்ள அலியார் பீர்முகம்மதின் தேர்வு குறித்து பிராந்தியத்தின் மூத்த படைப்பாளிகள் பலர் தமது சந்தேகங்களையும் அதிருப்திகளையும் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் விருதுக்காக படைப்பாளிகளை தேர்வு செய்யும் குழுவில் குறித்த அலியார் பீர்முகம்மது என்பவரின் உடன் பிறந்த சகோதரரான மருதூர் ஏ.மஜீத் என்பவர் இடம்பெற்றிருந்தார். இதனால், இந்த தேர்வு குறித்து தமக்கு சந்தேகமுள்ளதாக அம்பாறை மாவட்டத்தின் மூத்த படைப்பாளிகள் கூறுகின்றனர்.

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் இடம்பெறவுள்ள கிழக்கு மாகாண தமிழ் இலக்கிய விழாவில் தமிழ் முஸ்லிம் படைப்பாளிகள் 12 பேரின் கலை, இலக்கிய சாதனையினை கருத்திற் கொண்டு கிழக்கு மாகாண முதலமைச்சரால் விருது வழங்கி கௌரவிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிணங்க, அம்பாறை மாவட்டத்திலிருந்து கவிதை துறையில் சாதனை படைத்தமைக்காக அலியார் பீர்முகம்மது என்பவருக்கு முதலமைச்சர் விருது வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி அலியார் பீர்முகம்மது என்பவர் சாய்ந்தமருது பிரதேசத்தை சேர்ந்தவர். இவர் ஓய்வு பெற்ற உதவி கல்வி பணிப்பாளருமாவார்.

முதலமைச்சர் விருதுக்காக இவரின் பெயரை தேர்வு செய்த மூவர் கொண்ட தெரிவு குழுவில் அலியார் பீர்முகம்மதின் உடன் பிறந்த சகோதரரும் இலக்கியவாதியுமான மருதூர் ஏ. மஜீத் இடம்பெற்றிருந்தார். இதனால், இந்த தேர்வினை ஏற்றுக்கொள்ள முடியாது என மூத்த படைப்பாளிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

சாதாரனமாக, போட்டி நிகழ்வுகள் அல்லது பரீட்சைகள் இடம்பெறும் போது, அதில் பங்குபற்றுவோரின் குடும்பத்தவர்கள் நடுவராக  கடமையாற்றுவதில்லை. எனினும் இந்த விதிமுறையானது, கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதுக்கான படைப்பாளிகள் தெரிவில் மீறப்பட்டுள்ளதாக  அதிருப்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் விருதிற்கு அம்பாறை மாவட்ட  படைப்பாளிகளை தெரிவு செய்யும் குழுவில், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் யூ.எல். அஸீஸ், எழுத்தாளர் உமா வரதராஜன் மற்றும் மருதூர் ஏ. மஜீத் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

இது தொடர்பில் இக்குழுவின் உறுப்பினரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளருமான யூ.எல். அஸீஸை தொடர்புகொண்டு வினவிய போது,

தனது பெயர் இக்குழுவில் உள்ளடக்கப்பட்டிருந்த போதும், விருதிற்கு அம்பாறை மாவட்ட  படைப்பாளிகளை தெரிவு செய்யும் நடவடிக்கையில் நான் பங்குகொள்ளவில்லை என தெரிவித்தார்.

இதேவேளை தெரிவுக்குழுவின் மற்றொரு உறுப்பினரான எழுத்தாளர் உமா வரதராஜனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது: 'தெரிவு நடவடிக்கைக்காகச் செல்லும் வரையில், முதலமைச்சர் விருதுக்காக எவரெல்லாம் விண்ணப்பித்திருந்தனர் என தெரிவுக் குழுவினர் அறிந்திருக்கவில்லை.  ஆனால், தேர்வு நடவடிக்கையின் போது, அலியார் பீர்முகம்மதுவின் பெயரை மருதூர் ஏ.மஜீத் கண்டவுடன் - தெரிவுக் குழுவின் தலைவருக்கு அறிவித்து விட்டு, தார்மீகப் பொறுப்புடன் தெரிவுக் குழுவிலிருந்து ஒதுங்கியிருந்தால், அது முன் மாதிரியாக அமைந்திருக்கும்' என்றார்.


You May Also Like

  Comments - 0

  • suran Wednesday, 28 September 2011 01:44 AM

    சும்மா போங்க .................

    Reply : 0       0

    suran Wednesday, 28 September 2011 01:50 AM

    புல்லு அரிக்குது ............. ஹனிப் அஹ்மத் um கூட.

    Reply : 0       0

    IBNU ABOO Wednesday, 28 September 2011 02:09 AM

    நியாயமான சந்தேகம். கிழக்கின் கவிதைத்துறை வைரமுத்துவின் ஆற்றலுக்கு சவால் விடும் நிலை எய்தியுள்ளது. நமது கவிஜர்களை தெரிவு செய்வதற்கு இந்த நடுவர்களுக்கு எந்த தகுதியும் கிடையாது. பாம்பின் கால் பாம்பறியும் என்பார்கள் . வெட்கேக்கேடான தெரிவு .கவிதை உலகுக்கு புதியவரான இந்த பீர்முஹம்மத்தை சங்கடத்தில் மாட்டிவிட்டார் சகோதரர் மருதூர் மஜீத். சகோதர பாசத்தை வேறு விடயத்தில் காட்டிருக்கலாம்தானே.

    Reply : 0       0

    neethan Wednesday, 28 September 2011 03:13 AM

    கல்வி தராதர பரீட்சை( O/L ,A/L) களின்போது குதிரையோட்டம் பற்றி பேசுவர். முதலைமைச்சர் விருது தேர்விலும் இப்போது குதிரை அறிமுகமாகியுள்ளது போல.

    Reply : 0       0

    Akkaraipattu Wednesday, 28 September 2011 05:10 AM

    ஓஓஓஓ... இது கவிக் குதிரையா......???

    Reply : 0       0

    niba Wednesday, 28 September 2011 05:16 AM

    பீர்முஹம்மது அவர்கள் எத்தனை கவிதை எழுதியிருக்கிறார் என்ற செய்திகேட்டால் அதிர்ந்து விடுவீர்கள் (வேணாம் போங்க).

    Reply : 0       0

    meenavan Wednesday, 28 September 2011 02:19 PM

    வயதில் ஏழு சகாப்தங்களை கடந்த மருதூர் மஜீத் ஏன் இந்நிலைக்கு செல்ல வேணும்? தள்ளாத வயது காரணமோ? அவரது இலக்கிய பணியினையும் கேள்விக்குள்ளாகிறது? ஆசிரிய குருவே வேண்டாம் உங்களுக்கு இந்த வேலை?

    Reply : 0       0

    ஜோடா Wednesday, 28 September 2011 03:18 PM

    கிழக்கில் மட்டுமல்ல... நாடு முழுவதும் இந்தக் கொடுமை நடக்கிறது... விருதுகளுக்கான நபர்களையோ/ நூல்களையோ வெளிநாட்டவர்களைக் கொண்டு தகுதியின் அடிப்படையில் தெரிவு செய்ய வேண்டும்.

    மன்னாரில் நடைபெற இருக்கும் வட மாகாண இலக்கியவிழாவில் நீபி அருளானந்தத்தின் கடந்துபோகுதல் கவிதை நூலுக்கு சிறப்பு விருது கொடுக்கப்பட உள்ளது... கடந்து போகுதலில் இடம்பெற்றிருக்கும் “பைபிளை ஒட்டி எழுதப்பட்ட தொன்மம்” சில முரணாண தகவல்களைக் கொண்டுள்ளது. மேலும் கடந்து போகுதலில் இடம்பெற்றுள்ள கவிதைகள் விருது பெறும்அளவிற்கு தகுதியானதா

    Reply : 0       0

    suran Wednesday, 28 September 2011 08:39 PM

    உங்கள் போட்டி எல்லாம் கவிதைலதான் , விஞ்ஞான கண்டுபிடிப்பில் அல்ல ...... சும்மா போங்க ...............

    Reply : 0       0

    papa Wednesday, 28 September 2011 10:28 PM

    எதோ ஒஸ்கார் விருது , ஹ ஹ ஹ .. சும்மா போங்க .........

    Reply : 0       0

    IBNU ABOO Thursday, 29 September 2011 03:10 AM

    எங்கும் எதிலும் ஊழல் மலிந்த உலகின் தலைவிதியை போர்குணம் கொண்ட இலக்கியக்காரன் தன பேனா முனை ஆயுதம் கொண்டு மாற்ற விளைவதே இலக்கியத்தின் இலக்கணம். அந்தோ பரிதாபம். அந்த இலக்கியமே இன்று தனக்கு ஊழல் என்று மறு பெயர் சூடியுள்ளது. சத்தியத்தை தொலைத்த இலக்கிய வியாபாரிகள். இலக்கியம் ஒருவகை வேதம் என்று இலட்சியத்துடன் அதை நடைமுறைப்படுத்தும் பிரிவினர் இவர்களுடன் இல்லை.

    Reply : 0       0

    rahuman Thursday, 29 September 2011 03:15 PM

    பிரச்சினை மருதூர் மஜித்தின் தீர்ப்பு அல்ல. உமா வரதராஜன் என்ன தீர்ப்பை அளித்துள்ளார்.

    Reply : 0       0

    Akkaraipattu Sunday, 02 October 2011 04:54 AM

    அடப்பாவி தொழில் இல்லாதவனுக்கு இது ஒரு வெட்டித் தொழில் .............

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .