2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அடைமழையால் இயல்புநிலை பெரிதும் பாதிப்பு

A.P.Mathan   / 2011 நவம்பர் 25 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தற்போது அம்பாறை மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பல்லாயிரக்கணக்கான விவசாயக் காணிகள் நீரில் மூழ்கி இருப்பதுடன் ஏனைய செங்கல் உற்பத்தி, வீட்டுத்தோட்ட பயிர்செய்கை என்பன முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் அம்பாறை - கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதியின் மேலாக சுமார் 1 தொடக்கம் 2அடி வரையான வெள்ள நீர் பாய்த்து செல்கின்றது. இதனால் பிரதான போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி நாவிதன்வெளி பிரதேசத்துக்கான இருவழி பாதைகளும் போக்குவரத்து செய்யமுடியாமல் தடைப்பட்டுள்ளது. அதாவது கல்முனை, நற்பிட்டிமுனை ஊடாக நாவிதன்வெளிக்கு பிரயாணம் செய்யும் கிட்டங்கி தாம்போதி வீதி முற்றாக போக்குவரத்து செய்யமுடியாதுள்ளது. அதேபோன்று சம்மாந்துறை ஊடாக நாவிதன்வெளிக்கு பயணிக்கும் வழுக்காமடு வீதியூடாகவும் பயணம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால், வெளிப் பிரதேசங்களிலிருந்து நாவிதன் வெளி பிரதேசத்துக்கு அரச கடமைக்காக செல்பவர்கள் போக்குவரத்து தடைப்பட்டுள்ளதால் தத்தமது பிரதேசங்களிலுள்ள காரியாலயங்களில் கடமைகளில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

இதேசமயம் சம்மாந்துறை பிரதேசத்தில் சில இடங்களில் வீடுகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயரச் செய்வதற்கான முகாம் ஏற்பாடுகளை சம்மாந்துறை பிரதேச செயலகம் ஏற்பாடு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0

  • mufa Friday, 25 November 2011 08:38 PM

    உங்களுக்கு இந்த சின்ன பாலத்த விட்டா வேறு இடம் தெரியாதா??????

    Reply : 0       0

    சிறாஜ் Saturday, 26 November 2011 04:30 AM

    என்ன செய்வது? இருப்பது இதுதான். மக்கள் என்ன செய்வார்கள்?

    Reply : 0       0

    AHAMED JUNAID Saturday, 26 November 2011 11:03 PM

    இந்த மாவடிப்பள்ளி சின்னப்பாலத்தை அரசியல்வாதிகள் காண்பதில்லையா ? இப்பிரச்சினைக்கு இவர்களால் நிரந்தரமான தீர்வை தேடித்தர முடியாதா ? இப்பிரதேச அரசியல்வாதிகளே | மக்களின் போக்குவரத்து பிரச்சினைகளையும் சிந்தியுங்கள் .

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .