2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மட்டு., அம்பாறையில் தொடர் மழை

Super User   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 05:31 - 0     - {{hitsCtrl.values.hits}}



-ஜௌபர் கான், ஏ.ஜே.எம்.ஹனீபா, எம்.சி.அன்சார்,எஸ். பாக்கியநாதன், சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக இன்று வியாழக்கிழமையும் கடும் மழை பெய்து வருகின்றது.இன்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 58.9 மில்லிமீற்றர் மழை பதிவாகியுள்ளதாக மட்டு. மாவட்ட வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

அடை மழை காரணமாக புதிய காத்தான்குடி, ஆரையம்பதி, மண்முனை வடக்கு, கிரான் மற்றும் செங்கலடி ஆகிய பகுதிகளிலுள்ள பல வீடுகளும் பாதைகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மழை காரணமாக மீனவர்களின் வாழ்க்கை பெரிதும் பாததிக்கப்பட்டுள்ளன. அத்துடன் கடற்றொழில் நடவடிக்கைகள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, கடந்த சில தினங்களாக அம்பாறை மாவட்டத்திலும் கடும் மழை பெய்து வருகின்றன. தொடர்ச்சியான மழை காரணமாக அம்பாறை மாவட்டத்தின் தாழ் பிரதேசங்கள் பல வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன் வயல் நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

அத்துடன் அம்பாறை – கல்முனை பிரதான வீதியிலுள்ள மாவடிப்பள்ளி தாம்போதியின் நீர்மட்டம் தற்போது 1.5 அடி உயர்ந்துள்ளது சம்மாந்துறை, திருக்கோவில், பொத்துவில், கல்முனை, சாய்ந்தமருது, அட்டாளைச்சேனை, நிந்தவூர், காரைதீவு, நாவிதன்வெளி, இறக்காமம், லகுகல, அம்பாறை மற்றும் உகன பிரதேச செயலாளர் பிரிவுகள் தாழ்நிலப் பிரதேசங்களில் வெள்ளம் ஏற்பட்டுள்ளன.

இந்த பகுதிகளில் தொடர்ந்தும் மழை பெய்து வருவதனால் மக்கள் இடம்பெயரக்கூடிய நிலை ஏற்பட்டுள்ளதாக மக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.










You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .