2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சட்ட விரோதமாக கடற்கரை மண் ஏற்றியவருக்கு தண்டம்

Kogilavani   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

அம்பாறை, அக்கரைப்பற்று கட்றகரைப் பிரதேசத்தில் உழவு இயந்திரம் மூலம் சட்ட விரோதமாக கடற்கரை மண் ஏற்றியவருக்கு அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதி ஏ.ஜி.அலக்ஸ்ராஜா ரூபா 5000 தண்டப்பணம் விதித்து புதன்கிழமை(02) தீர்ப்பளித்தார்.

அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொலிஸ் சார்ஜன் யூ.எல்.எம். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் புதன்கிழமை (2) மேற்கொண்ட சுற்றி வளைப்பின்போது மேற்படி நபர் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டார்.

அக்கரைப்பற்று கடற்கரைப் பிரதேசத்தில் சட்ட விரோதமான முறையில் அண்மகை;காலமாக கடற்கரை மண் ஏற்றப்பட்டு வருவதாக மக்கள் தெரிவித்ததை அடுத்தே இப்பிரதேசங்களில் பொலிஸார் கண்கானிப்பு நடவடிக்கையினை மேற்கொண்டு வருவதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .