2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சந்திப்பு...

Kogilavani   / 2014 ஏப்ரல் 08 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

\
-எஸ்.எம்.எம்.றம்ஸான்


கொய்கா மற்றும் ஆசிய மன்றம் என்பவற்றின் உயர்மட்டப் பிரதிநிதிகள் திங்கட்கிழமை (7) கல்முனை மாநகர சபைக்கு விஜயம் செய்து, மாநகர முதல்வர் சட்டத்தரணி எம்.நிசாம் காரியப்பரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

ஆசிய மன்றத்தின் நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத்தின் ஒருங்கிணைப்புடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் கல்முனை மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர்,  சிரேஷ்ட வேலைகள் அத்தியட்சகர் எம்.ஐ.ஏ.மஜீத், உள்ளிட்ட அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

இதன்போது கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவம், கல்முனை ஐக்கிய சதுக்க நிர்மாணம் உள்ளிட்ட அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால செயற்திட்டங்கள் குறித்து இப்பிரதிநிதிகளுக்கு மாநகர முதல்வர் விரிவாக எடுத்துரைத்தார்.

தமது திட்டங்களுக்கு கொய்கா மற்றும் ஆசிய மன்றம் போன்ற சர்வதேச தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்பை மேலும் எதிர்பார்ப்பதாகவும் முதல்வர் இதன்போது வலியுறுத்தியுள்ளார்.

இதன்போது, கல்முனை மாநகர சபையின் சுகாதாரத் தொழிலாளர்களுக்கான ஒரு தொகுதி பாதுகாப்பு அங்கிகள் கொய்கா அதிகாரிகளினால் முதல்வரிடம் கையளிக்கப்பட்டது.

அத்துடன் கல்முனை மாநகர சபையின் சுகாதாரத்துறை தொடர்பிலான அறிக்கையை பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சி.எம்.மாஹிர் சமர்ப்பித்தார்.

அதேவேளை கொய்கா நிதியுதவியுடன் கல்முனை நகரில் அமைக்கப்பட்டு வருகின்ற ஐக்கிய சதுக்க நிர்மாணப் பணிகளையும் இவ்வுயர்மட்டப் பிரதிநிதிகள் பார்வையிட்டனர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .