2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரதேசவாதம் பேசுவதால் அபிவிருத்தியை பெறமுடியாது:அதாவுல்லா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 20 , பி.ப. 01:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.ஜே.எம்.ஹனீபா
 
சம்மாந்துறைப் பிரதேசத்தின் அபிவிருத்தி விடயத்தில் கட்சி பேதங்கள் மறந்து அனைவரும் ஒன்றினைந்து பணியாற்ற முன்வர வேண்டும் வெறும் பிரதேசவாதங்கள்  பேசிக் கொண்டிருப்பதனால் எந்தவொரு அபிவிருத்தியினையும் பெற்றுக் கொள்ள முடியாது என உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் சனிக்கிழமை (19) தெரிவித்தார்.
 
சம்மாந்துறைப் பிரதேச கிராம உத்தியோகத்தர்கள் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் ஓய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் அவர்களினால் தொகுத்து எழுதப்பட்ட 'காமரி முதல் கிராம நிலதாரி வரை' எனும் வரலாற்று ஆய்வு நூல் வெளியீட்டுவிழா ஓய்வு பெற்ற கிராமசேவை நிர்வாக உத்தியோகத்தர் ஏ.எம்.,த்ரீஸ் தலைமையில்  நடைபெற்றது
 
அமைச்சர் அதாவுல்லா  தொடர்ந்து உரையாற்றுகையில்

சம்மாந்துறை பிரதேசம் தொடர்பாக நான் பல கனவுகளுடன் பணியாற்றி வருகின்றேன்.
 
சம்மாந்துறை மண்ணுக்கு இரண்டு சபைகளை வழங்கவுள்ளேன் அதாவது நகர சபை ஒன்றினையும் பிரதேச சபை ஒன்றினையும் வழங்கவும் அதற்கான சகல வசதி வாய்ப்புக்களையும் வழங்கவுள்ளேன் ஆனால் இதுவரைகாலமும் இந்த விடயம் தொடர்பாக பேச என்னிடம் யாரும் வந்ததில்லை மேடைகளில் சந்தர்ப்பவாதம்   பேசிவிட்டுச் என்னை இந்த பிரதேசத்துக்கு உதவி செய்யாதவன் செய்வதில் அக்கரையில்லதவன் என்று என்னை குறைகான யாரும் வரக் கூடாது என நான் இந்த சபையில் தெளிவாக எந்த அரசியல் நோக்கமும் அற்றவனாக கூறிக் கொள்கின்றேன்.
 
நான் ,ந்த ஊரின் அரசியல் தலைவனாக இருந்து மறைந்த தலைவர் அன்வர் இஸ்மாயிலுடன் இணைந்து பல பணிகளை ஆற்றியுள்ளோம் ,ந்த ஊரின் அபிவிருத்தி மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள்; தொடர்பாக  விமர்சிப்பதாகவிருப்பின் நான் கண்டிளைப் பற்றி பேச வேண்டும் .
 
நான் இந்த நூல்வெளியீட்டு விழாவில் நூல் வெளியீடும் அதன் கௌரவமும் முக்கியத்துவமும் தொடர்பாக பேசுவதா அல்லது இந்த ஊரின் அபிவிருத்தி தொடர்பாகவும் அரசியல் விடயம் தொடர்பாகவும் பேசுவது பொருத்தமானதாக அமையுமா என சிந்தித்த நிலையிலே இந்த சபை ஒரு பொதுவான சபையாகவும் ஊரின் முக்கிய விடயங்கள் தொடர்பாக இந்த சபையில் பேசப்பட்டதற்கு அமைவாகவுமே இதனை தெரிவிக்கின்றேன்.
 
எந்தவொரு விடயத்திலும் தெளிவும் நேர்மையும் இருக்க வேண்டும் அரசியலுக்காக நான் ஒரு போதும் பொய்களை கூறுபவன் அல்ல யதார்த்தங்களை கடந்த காலங்களில் பேசிவந்துள்ளேன் இப்போதும் பேசிக் கொண்டிருக்கின்றேன்  அதனை பல தடவைகள் நாம் நிரூபித்துள்ளோம் எமது தலைவர் மறைந்த மாமனிதர் மர்ஹூம் அ';ரப் அவர்களிடமிருந்து கற்றுக்கொண்ட விடயங்களையே செயல்படுத்தி வருகின்றேன்.
 
அரசியலுக்காக காலத்துக்கு காலம் முறன்பட்ட கருத்துக்களை தெரிவிப்பவன் நானல்ல இந்த மேடையிலே இருக்கின்ற அனைவரும் தலைவர் அ';ரப் அவர்களின் பாசரையில் வாழ்ந்தவர்கள் சகலருக்கும் யதார்த்தம் புரியும் அதனை விடுத்து சந்தர்ப்பவாதம் பேசுவதும் அக்கரைப்பற்று, கல்முனை, சம்மாந்துறை என்று பிரித்து பிரதேச வாதம் பேசுவதனால் எந்த வெற்றியினையும் அடைந்து கொள்ள முடியாது அதற்கு நிறையவே சான்றுகள் உள்ளது எனவும் அமைச்சர் அதாஉல்லா தெரிவித்தார்.
 
இங்குள்ள அனைவரும் ஒன்றினைந்து இந்த ஊரின் எதிர்காலம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது பற்றி நன்றாக சிந்தித்து அதற்கான வரைபுகளை மேற்கொள்ள வேண்டும்.
 
இப் பிரதேசத்தில் கடமையாற்றி மறைந்தவர்களினதும் ஓய்வு பெற்றவர்களினதும், தற்போது கடமையாற்றி வருகின்ற கிராம சேவகர்களினதும் சேவைகளை பாராட்டுகின்ற நிகழ்வானது கிழக்குப் பராந்தியத்தில் வராலாற்றுத் தடயமாவதுடன் ஏனைய பிரதேசங்களுக்க ஒரு முன்மாதிரியாகவும் அமையும் என்பதில்  சந்தேகமில்லை.
 
எமது பிரதேசத்தில் பலதரப்பட்டவர்கள் கௌரவிக்கப்படுகின்றனர் ஆனால் அன்று தொடக்கம் இன்று வரைக்கும் பிரதேசத்தின் அபிவிருத்திக்கும் சகல விடயங்களுக்கம் பொறுப்பாக இருந்த வந்த ஆளுமைகள் கௌரவிக்கப்படுவது இது முதல் தடவையாகும் இதனை தொகுத்து நூலுருவாக்கிய உருவாக்கிய ஓய்வு பெற்ற நிர்வாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.சலீம் அவர்களுக்கும் அதற்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களுக்கும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன் எனவும் தெரிவித்தார்.
 
எமது எதிர்காலம் சிறப்பாக அமைய நாம் ஒன்றினைந்து நல்ல பணிகளை ஆற்றுவோம் எனவும் அமைச்சர் கூறினார்.


You May Also Like

  Comments - 0

  • ibnu aboo Sunday, 20 April 2014 02:49 PM

    உங்கள் வெள்ளை உள்ளம் கறுப்புக் கண்ணாடி அணிந்தவர்களுக்கு எப்படித் தெரியும் அமைச்சரே...

    Reply : 0       0

    meenavan Tuesday, 22 April 2014 06:15 AM

    நீங்கள் கூறும் பிரதேசவாதம் என்பது மு.கா.வின் கர்த்தா மர்ஹூம் அஷ்ரஃப்பின் மறைவின் பின்னர் கூர்மை அடைந்துள்ளமை மறுக்க முடியாத உண்மை...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .