2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

'இனிய பாரதியினால் திருக்கோவில் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்'

Kogilavani   / 2015 பெப்ரவரி 08 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரீ.கே.றஹ்மத்துல்லா

'முன்னாள் ஜனாதிபதியின் இணைப்பாளரும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இனிய பாரதி என்றழைக்கப்படும் கே.புஸ்பகுமாரினால் திருக்கோவில் பிரதேச மக்கள் பல வழிகளிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த காலங்களில் ஆட்சி, அதிகாரங்களைப் பயன்படுத்தி ஜனநாயகத்துக்கு முரணான வழிகளில்; அவர் செயற்பட்டுள்ளார்' என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தெரிவித்தார்.


ஜனாதிபதித் தேர்தலின் மறுதினம் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.புஸ்பகுமாரவை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனும் அவரது ஆதரவாளர்களும் அச்சுறுத்தி, தாக்க வந்ததாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரால் திருக்கோவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.


இதுதொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தர்.

இங்கு தொடர்ந்தும் தெரிவித்த அவர்,


தற்போது மாகாண சபை உறுப்பினராகவிருக்கும் இனிய பாராதி என்பவரால் 2010ஆம் ஆண்டு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் ஜனநாயக முறையில் நீதிமன்றத்துக்கு சென்றேன்.


மேலும் சிறுவர்களை ஆயுதப்படையில் இணைத்தமை, ஆட்கடத்தல், இலக்கத்தகடற்ற வாகனம் பாவித்தமை போன்ற பல பாரிய குற்றச்சாட்டுக்களும் ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகளினால் இவருக்கெதிராக சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


பணத்துக்காகவும் அரசியலாபத்துக்காகவும் சுகபோகங்களுக்காகவும் தமது பிரதேசத்தையும் சமூகத்தையும் தொடர்ந்து காட்டிக் கொடுக்கும் செயற்பாடுகளை திருக்கோவில் பிரதேச மக்கள் அங்கிகரிக்கப்போவதில்லை என்பதை இனியபாரதி புரிந்துகொள்ள வேண்டும்.


கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி இப்பிரதேச மக்களை பயமுறுத்தி அடக்கி ஆள்வதற்கு பல கையாட்களையும் பணததையும் பயன்படுத்திவந்த இவர் மீது, மக்கள் கடுமமையான விசனத்தையும் எதிர்ப்பையும் காட்டி வருகின்றனர்.


முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்கப்பட்டதும் திருக்கோவில் பிரதேச மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து மாகாண சபை உறுப்பினரின் வீட்டுக்கு முன் நின்று பாரிய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


இதன்போது ஆத்திரமடைந்த மக்கள் வன்செயல்களில் ஈடுபடக்கூடிய சாத்தியமும் காணப்பட்டதால், அவ்விடத்துக்குச் சென்று ஆர்ப்பாட்டம் செய்தவர்களை பொலிஸாரின் உதவியுடன் கலைப்பதற்கு முயற்சி செய்தேன்.


இதற்காக நான் உட்பட பிரதேச சபை உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் உள்ளிட்ட  22 பேருக்கெதிராக மாகாண சபை உறுப்பினர் இனிய பாரதி முறைப்பாடு செய்துள்ளார்.


அச்சுறுத்ல் விடுக்கப்பட்டதாகவும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் திருக்கோவில் பொலிஸில் பொய்யான முறைப்பாட்டை செய்துள்ளார்.


இதனையடுத்து சனிக்கிழமை(7) பொலிஸாரிடம் நடந்த விடயங்கள் பற்றிய உண்மையகளைக் கூறினோம். குறித்த தினத்தன்று கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகளும் சம்வத்தை கூறினர்.


இதன் பின்னர் முறைப்பாடு வாபஸ் பெறப்பட்டதுடன் சமாதானமாக செல்லுமாறும் பிரச்சினைகள் ஏற்படாவண்ணம் மக்களை வழிநடத்துமாறும் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆலோசனைகளை கூறினார்.


கடந்தகால யுத்தத்தின் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதேசங்களே அதிகம் பாதிக்கப்பட்டிருந்தன.
இப்பிரதேச மக்களின் வாழ்வாதாரம், உட்கட்டமைப்பு அபிவிருத்திகள், சுகாதாரம், கல்வி, கலாசாரம் போன்ற அனைத்தும் மிக மோசமான நிலையிலேயே காணப்படுகின்றன.


யுத்தத்தின்போதும், யுத்தத்தின் பின்னரும் இப்பிரதேசங்களில் காணமால் போனவர்கள், ஆட்கடத்தல்கள், வேறு சேதங்கள் ஏற்பட்டிருப்பின் அவை தொடர்பான உரிய ஆதாரங்களுடன் பாதிக்கப்பட்டவர்கள் எம்மிடம் சமர்ப்பிப்பார்களாயின் அவர்களுக்கான உதவிகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நாங்கள் தயாரா இருக்கின்றோம்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .