2024 மே 02, வியாழக்கிழமை

வங்கி மதில் உடைக்கப்பட்டதை கண்டித்து பணிப்பகிஷ்கரிப்பு

Suganthini Ratnam   / 2015 ஜூலை 30 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

-.ஏ.எஸ்.எம்.முஜாஹித்

சாய்ந்தமருது திவிநெகும சமுர்த்தி வங்கியின் பின்புற மதில் தனிநபர் ஒருவரினால் உடைக்கப்பட்டு வங்கி முகாமையாளர் அச்சுறுத்தப்பட்ட சம்பத்தைக் கண்டித்து  சாய்ந்தமருது திவிநெகும அபிவிருத்தி மற்றும்; வங்கி உத்தியோகஸ்;தர்கள் நேற்று வியாழக்கிழமை பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்;

சாய்ந்தமருது திவிநெகும வங்கிக்கு சொந்தமான பின்புற வளவை  தனிப்பட்ட நபரொருவர் தன்னுடைய வளவு என்று  உரிமை கோரிக்கொண்டுஇ வளவின் பின்புற மதிலை  உடைத்தெறிந்து அத்துமீறி உள்ளே புகுந்து வங்கி வளவினுள் நடப்பட்டிருந்த மரக்கண்டுகளையும் சேதப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில் கடமைக்கு சென்ற வங்கி முகாமையாளர்இ தனிநபர் ஒருவர் வங்கி வளவினுள் அத்துமீறி நின்றதையும் மதில் உடைக்கப்பட்டதையும் கண்டு அவரிடம் நியாயம் கேட்க சென்றபோதுஇ அந்நபர் தகாத வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொண்டு  முகாமையாளரை அச்சுறுத்தியுள்ளார்.

இச்சம்பவத்தை கண்டித்தும் குறித்த நபரை கைது செய்யுமாறும் கோரியும் உத்தியோகஸ்தர்கள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற  சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்இ சம்பவம் தொடர்பாக கேட்டறிந்ததுடன், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் மாவட்ட திவிநெகும்  பணிப்பாளர் ஆகியோருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
 

உத்தியோகஸ்தர்களின் பணிப்பகிஷ்கரிப்பை அடுத்து முகாமையாளரை அச்சுறுத்திய நபரை கல்முனை பொலிஸார் கைதுசெய்துள்ளதுடன்இ இது தொடர்பான விசாரணைகளையும் மேற்கொண்டு வருவதாக சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .