2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஏப்ரல் 08 , பி.ப. 04:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

உள்ளுராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள புதிய உறுப்பினர்கள், சிறந்த கோட்பாட்டுகளுடன் மக்களுக்கான அபிவிருத்தி திட்டங்களை கொண்டு செல்வதற்கு அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு புதிய தவிசாளராக ஏ.எல்.எம். அமானுல்லாவின் கடமையேற்பு வைபவம் நேற்று (07) பிரதேச சபையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

பிரதேச சபைக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு, மக்கள் வழங்கிய ஆணையை சரியான முறையில் பயன்படுத்தி கட்சி பேதங்களை மறந்து எல்லோரும் ஒற்றுமையுடன் செயற்பட்டு மக்களுக்கான அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க வேண்டும்.

பின் தங்கிய பிரதேசங்களை இனங்கண்டு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஒவ்வொரு உறுப்பினரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.

கடந்த காலங்களில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு நீங்கள் அளித்த வாக்கைப் போன்று உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு ஒற்றுமையுடன் வாக்களித்து இந்த பிரதேச சபையை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆளுவதற்கு ஆணை வழங்கிய உங்களுக்கு நான் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன் என்றார்.

இந் நிகழ்வில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி அமைச்சின் செயலாளர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர், கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

 

 

 

               

               


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .