2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பசறைச்சேனையில் டெங்கு தொடர்பான ஆய்வு

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 06 , பி.ப. 12:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை - பொத்துவில் பசறைச்சேனை பிரதேசத்தில் டெங்கு நோயினால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்ஸதீன் நேற்று (05) தெரிவித்தார்.

 

அவர் இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கையில்,

பசறைச்சேனை பிரதேசத்திற்கு நேற்று (05) பூச்சியல் ஆய்வாளர்கள் விஜயம் மேற்கொண்டு, அப்பிரதேசங்களில் டெங்கு நுளம்பு தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டார்கள்.

பின்னர், பூச்சியல் ஆய்வாளர்களின் அறிக்கை கிடைத்தவுடன் நாம் அப்பிரதேசத்தில் புகை விசுறும் நடவடிக்கையை  மேற்கொண்டதுடன்,விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் ஒன்றையும் முன்னெடுத்தோம்.

பொத்துவில் பிரதேசத்தில் நுளம்பு பரவக் கூடிய இடங்களையும், வெற்றுக் காணிகளையும் வைத்திருப்பவர்கள் 03 நாட்களுக்குள் துப்பரவு செய்ய வேண்டுமெனவும், தவறுபவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  சுகாதார வைத்தியதிகாரி ஏ.எல். இஸ்ஸதீன் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .