2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘ஈரான் பின்வாங்குகிறது’

Editorial   / 2020 ஜனவரி 09 , பி.ப. 07:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈராக்கில், ஐக்கிய அமெரிக்கப் படைகள் மீது ஏவுகணைகளை ஈரான் நேற்று அதிகாலையில் ஏவியதன் பின்னர் ஈரான் பின்வாங்குவதாக ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நேற்று தெரிவித்துள்ளார்.

மேற்படி தாக்குதல்களில் எந்த ஐக்கிய அமெரிக்கர்களும் பாதிப்படையவில்லை எனத் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ள நிலையில், 16 குறுந்தூர ஏவுகணைகளை ஈரான் ஏவியதாகவும், அல்-அசாட் வான் தளத்தை குறைந்தது 11 தாக்கியதாகவும், இர்பிலுள்ள மய்யத்தை ஒன்று தாக்கியதாக ஐக்கிய அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களம் கூறியுள்ளது.

இந்நிலையில், ஈரானிய அரசாங்கத்தின் மீது மேலதிக பொருளாதாரத் தடைகளை ஐக்கிய அமெரிக்கா விதிக்கும் என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஏவுகணைத் தாக்குதல்கள் ஐக்கிய அமெரிக்காவின் முகத்தில் அறையொன்று எனக் கூறியுள்ள ஈரானிய உயர் தலைவர் அயோத்துல்லா அலி காமேனி, பிராந்தியத்தை விட்டு ஐக்கிய அமெரிக்கப் படைகள் வெளியேற வேண்டும் எனக் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஈராக் அனுபவிக்கின்ற நெருக்கடி முடிந்து விட்டது என்று தெரிவித்துள்ள ஈராக் ஷியா மதகுருவான மொக்டடா அல்-சதார், தாக்குதல்களை மேற்கொள்ள வேண்டாம் என ஆயுதக் குழுக்களை வலியுறுத்தியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய அமெரிக்க இலக்குகளைத் தாக்க வேண்டாம் என நட்புறவு ஆயுதக்குழுக்களுக்கு ஈரான் தகவல்களை அனுப்புவதான வரவேற்கத்தக்க புலனாய்வை ஐக்கிய அமெரிக்க பெறுகிறது என ஐக்கிய அமெரிக்க உப ஜனாதிபதி மைக் பென்ஸ் தெரிவித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .