2024 மே 08, புதன்கிழமை

பிரேஸில் முன்னாள் ஜனாதிபதிக்கெதிராக குற்றச்சாட்டுக்கள் பதிவு

Shanmugan Murugavel   / 2016 மார்ச் 10 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

பணச்சலவை விசாரணயொன்றில் பிரேஸிலின் முன்னாள் ஜனாதிபதி லுலா டா சில்வா மீது பிரேஸில் அரச வழக்குரைஞர்கள் குற்றச்சாட்டுக்களை பதிவு செய்துள்ளனர். எவ்வாறெனினும் தன் மீதான குற்றச்சாட்டுக்களை மறுத்த அவர், இவை அரசியல் ரீதியில் முன்னெடுக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் எனத் தெரிவித்துள்ளார்.

பிரேஸில் அரசின் எண்ணெய் நிறுவனமான பெற்றோபிராஸில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மோசடிகளின் ஒரு அங்கமாகவே மேற்படி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

பிரேஸிலின் உல்லாச பொழுதுபோக்கிடமான குவருஜாவில் உள்ள கடற்கரை வீடொன்றின் உரிமையை, முன்னாள் ஜனாதிபதி லுலாவும் அவரது மனைவி மரிஸ்ஸா லெடிசியாவும் கொண்டிருப்பதாக நம்பப்படுகையில், அது தொடர்பான விசாரணைகளையே இவர்கள் எதிர்நோக்குகின்றனர்.

சா போலோ அரச வழக்குரைஞர்களினால் பணச்சலவையில் ஈடுபட்டதாக, உத்தியோகபூர்வமாக 16 பேர் குற்றஞ்சாட்டப்படுகையில், அதில் முன்னாள் ஜனாதிபதி லுலாவின் மகனும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டதை நேற்று வியாழக்கிழமை (10) பிற்பகல் இடம்பெற்ற செய்தியாளர் மாநாடொன்றிலேயே வழக்குரைஞர்கள் அறிவித்திருந்தநிலையில், இவை, நீதிபதியால் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X