2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மும்பை தாக்குதல்;முஹம்மத் அஜ்மல் கஸாப்புக்கு தூக்கு தண்டனை

Super User   / 2010 மே 07 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்திய மும்பை நகரில் இடம்பெற்ற தாக்குதல்ச் சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றவாளியான முஹம்மத் அஜ்மல் கஸாப்புக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

முஹம்மத் அஜ்மல் கஸாப்பை தூக்கிலிடுமாறு மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எல்.தஹலியானி நேற்று தீர்ப்பளித்தார்.

கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் பாகிஸ்தானைச் சேர்ந்த 10 தீவிரவாதிகள் கடல் மார்க்கமாக ஊடுருவி மும்பை நகரில் தாக்குதல் நடத்தியிருந்தனர். மும்பையிலுள்ள தாஜ் ஹோட்டல் மற்றும் நரிமன் இல்லம் ஆகியவற்றை முற்றுகையிட்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியிருந்தனர். இந்தத் தாக்குதலின்போது 160 பொதுமக்கள் உயிரிழந்திருந்தனர்.

இந்த நிலையில், முஹம்மத் அஜ்மல் கஸாப்பை இந்தியப் பொலிஸார் கைதுசெய்திருந்தனர்.

மும்பைத் தாக்குதலுக்கு பாகிஸ்தானைச் சேர்ந்த லஷ்கர் ஈ தொய்பா அமைப்பு உடந்தையாக இருந்து செயற்பட்டுள்ளது என இந்தியா குற்றஞ்சாட்டியுள்ளது. 



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .