2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மறைந்த போலந்து ஜனாதிபதியின் இரட்டைச் சகோதரர் தேர்தலில் போட்டியிட தீர்மானம்

Super User   / 2010 ஏப்ரல் 27 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

விமான விபத்தில் உயிரிழந்த போலந்து நாட்டு ஜனாதிபதியின் இரட்டைச் சகோதரர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் நடைபெறவிருக்கும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவிருப்பதாக மறைந்த ஜனாதிபதி லீச் காசியன்ஸிகியின் சகோதரர் ஜேரொஸ்லோ காசியன்ஸிகி குறிப்பிட்டார். தமது சகோதரரின் மறைவினால் ஏற்பட்டிருக்கும் வெற்றிடத்தை நிரப்புவதற்கு தாம் முன்வந்திருப்பதாகவும் அவர் கூறினார்.

ரஷ்யாவில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்றிருந்த விமான விபத்தில் போலாந்து நாட்டு ஜனாதிபதி லீச் காசியன்ஸிகி மற்றும் அவரது பாரியார் உட்பட 95 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .