2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

வினையாகின வாணவேடிக்கைகள்: 31 பேர் பலி; 72 பேர் காயம்

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 01:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்ஸிக்கோவின் தலைநகருக்கு வெளியே அமைந்துள்ள வாணவேடிக்கைகளை விற்பனை செய்யும் சந்தையில் ஏற்பட்ட பாரிய வெடிப்புகள் காரணமாக, குறைந்தது 31 பேர் பலியானதோடு, குறைந்தது 72 பேர் காயமடைந்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்புகள் காரணமாக, அச்சந்தைப் பகுதியே, வெறுமனே கரித் துண்டக் கழிவுகளாக மாறியது.

மெக்ஸிக்க நேரப்படி செவ்வாய்க்கிழமை மாலை 3 மணியளவில் (இலங்கை நேரப்படி இன்று அதிகாலை 2:30), இந்த வெடிப்புகள் ஏற்பட்டன. மெக்ஸிக்கோ நகரத்துக்கு 32 கிலோமீற்றர்கள் வடக்காக, வெடிபொருட்களாகப் பெயர் போன சான் பப்லிட்டோ சந்தை உள்ள துல்டெபெக் பகுதியிலேயே இந்த வெடிப்பு ஏற்பட்டது. கிறிஸ்மஸ் நெருங்கிவரும் நிலையில், தங்களுக்கான வாணவேடிக்கைகளையும் வெடிகளையும் வாங்குவதற்காக அந்தச் சந்தையில், ஏராளமானோர் ஒன்றுகூடியிருந்த போதே, இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

வெவ்வேறான ஆறு வெடிப்புகள் ஏற்பட்டே, இந்தப் பாரிய வெடிப்பு, ஒட்டுமொத்தமாக ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். வெடிப்பு ஏற்படும் போது, 300 கடைகளைக் கொண்ட இந்தச் சந்தையில், சுமார் 300 தொன் வெடிபொருட்கள் காணப்பட்டன என அறிவிக்கப்படுகிறது. இந்த வெடிப்பால், கடைகளில் 80 சதவீதமானவை, எரிந்து நாசமாகியுள்ளன. வானை நோக்கி, பல்வேறு வர்ணங்களாலான வாணவேடிக்கைகள், தொடர்ச்சியாகச் சென்றுகொண்டிருந்ததோடு, பாரிய புகைமண்டலம் ஏற்பட்டமையையும், காணொளிகள் மூலமாகக் காணக்கூடியதாக இருந்தது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .