2024 மே 14, செவ்வாய்க்கிழமை

லிபிய ஆர்ப்பாட்டத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்வு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 20 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

லிபியாவில் இடம்பெற்று வரும் அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தின்போது, பலியானவர்களின் எண்ணிக்கை 104ஆக உயர்வடைந்துள்ளது.

பெங்காஸி நகரில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின்போது, படையினரின் பாரிய தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தவர்களில் 20 பொதுமக்கள் அடங்குவதாக மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு தெரிவித்தது.

லிபியாவில் 42 வருடகாலமாக ஆட்சி செய்கின்ற கேணல் முவம்மர்; கடாபிக்கு எதிராக  லிபியாவின் கிழக்குப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது படையினர் துப்பாக்கிச் சூடு, மோட்டார்த் தாக்குதல்கள், ஆயுதத் தாக்குதல்கள் ஆகியவற்றை மேற்கொள்வதாக சம்பவத்தை நேரில் கண்ட சாட்சியங்கள் தெரிவித்துள்ளன.

காயமடைந்த நிலையில் 150 பொதுமக்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்களில் 22 பேர் நேற்று சனிக்கிழமை உயிரிழந்துள்ளதாகவும் வைத்தியர் ஒருவர் தெரிவித்துள்ளார். மேலும் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் அவ் வைத்தியர் கூறினார்.

இதற்கிடையில், வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் செய்தி சேகரிக்கும் பணியில் ஈடுபடுவதற்கு லிபிய நாட்டு அதிகாரிகள் அனுமதியளிக்கததால் தகவல்களை உறுத்திப்படுத்துவதில் சிரமமாகவுள்ளதாகவும்  தெரிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0

  • aameer Tuesday, 01 March 2011 03:47 AM

    கடைபி நாட்டை விட்டு வெளியேற வேண்டும்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .