2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தமிழகத்தில் ரயில்கள் மோதல்; 15 பேர் பலி, 70 பேர் காயம்

Super User   / 2011 செப்டெம்பர் 13 , பி.ப. 06:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தமிழகத்தில் சென்னைக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை   இரவு இரு ரயில்கள் மோதிக்கொண்டதால் குறைந்தபட்சம் 15 பேர் பலியானதுடன் மேலும் 70 பேர் காயமடைந்துள்ளனர்.

அரக்கோணம் ரயில் நிலையத்திற்கு அருகில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த அரக்கோணம் - காட்பாடி மின்சார பயணிகள் ரயில் மீது, வேலூர் நோக்கிச் சென்ற வேலூர் -கோவை மின்சார ரயில் மோதியதால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

மேல் பாக்கம் மற்றும் சைதேரி ரயில் நிலையங்களுக்கிடையிலான பாதையில் அரக்கோணத்திற்கு அருகில் சமிக்ஞைக்காக அரக்கோணம் - காட்பாடி ரயில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்ததாக முதற்கட்ட செய்திகள் தெரிவிக்கின்றன.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த ரயிலின் 5 பெட்டிகளும் நகர்ந்துகொண்டிருந்த ரயிலின் 3 பெட்டிகளும் விபத்தையடுத்து தடம் புரண்டன.

காயமடைந்தவர்கள் அரக்கோணம் அரசினர் பொது வைத்தியசாலையிலும் வேலூர்; மருத்துவ கல்லூரி வைத்தியசாலையிலும்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

 

 


 


You May Also Like

  Comments - 0

  • aj Wednesday, 14 September 2011 06:08 AM

    வல்லரசு , ..... அரசு என்று எல்லாம் தனக்கு தானே சொல்லிகொள்ளும் நாடு தொடராக நடக்கும் இந்த ரயில் விபத்தை தடுக்க என்ன உருப்படியாக செய்து இருக்கிறது என்று இதுவரை தெரியவில்லை. மக்கள் நலன் கருதியும் செயல்படுங்கள்.ஆழந்த அனுதாபங்கள் உறவுகளே :sad:( RIP

    Reply : 0       0

    neethan Wednesday, 14 September 2011 11:57 AM

    சிக்னல் கோளாறு விபதிட்க்கு காரணமாகலாம்?ஆனால் தமிழக அரசு பொறுப்பு கூறவேண்டும்.இதிலும் அரசியல் சடுகுடு நடத்தாது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய நட்டஈடு கொடுக்கவேண்டும். உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி காணிக்கை.

    Reply : 0       0

    Dr. Javahir Wednesday, 14 September 2011 03:17 PM

    இது உண்மையில் ஓட்டுனரின் கவனயீனத்தினால் ஏற்பட்ட விபத்து. அதை விடுத்து எல்லாவற்றிற்கும் அரசை குறை சொல்ல வேண்டாம்.

    Reply : 0       0

    Mark Wilson Wednesday, 14 September 2011 06:43 PM

    அவன் அவனுக்கு அவங்கட பிரச்சினை..... இவங்களுக்கு எல்லாமே பிரச்சினை......

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .