2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீன மண்சரிவில் புதையுண்டவர்களை மீட்பதற்காக பணியாளர் அனுப்பிவைப்பு

Suganthini Ratnam   / 2010 ஓகஸ்ட் 09 , மு.ப. 03:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சீனாவில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி புதையுண்டவர்களை மீட்கும் முகமாக 1000 மீட்புப் பணியாளர்களை பாதிக்கப்பட்ட பகுதிக்கு சீனா அனுப்பி வைத்துள்ளது.

சீனாவின் தென்மேற்குப் பகுதியான கன்சூ மாகாணத்தில் நேற்று  ஞாயிற்றுக்கிழமை அதிகாலை  ஏற்பட்ட  மண்சரிவில் சிக்கி 127 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், சுமார் 2000 பேர் காணாமல் போயுள்ளனர்.

இந்நிலையில், ஹெலிகொப்டர் மற்றும் விமானத்துடன் 4,500 படையினர், மருத்துவப் பணியாளர்கள் மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக அடை மழை  பெய்து வருவதுடன், அங்கு வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளன.
 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .