2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பர்மாவுக்கு செல்லும் முதல் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 09 , மு.ப. 08:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேர்தல் வெற்றிப் பரபரப்பு மாறாத நிலையில் பர்மாவுக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா அங்கு செல்லும் முதலாவது அமெரிக்க ஜனாதிபதி ஆவார் என வெள்ளைமாளிகை தெரிவித்துள்ளது.

பர்மாவுக்கான விஜயத்தை இந்த மாதம் மேற்கொள்ளவுள்ள அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா பர்மிய ஜனாதிபதி தெய்ன் செய்ன் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகியையும் சந்திக்கவுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

ஒபாமா அரசாங்கம் ஊக்குவிக்க விரும்பிய பொருளாதாரம், அரசியல், ஏனைய சீர்த்திருத்தங்களை பர்மிய அரசாங்கம் செயற்படுத்த தொடங்கியுள்ளது.

இந்த மாதம் 17ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரையான இந்த மூன்றுகட்ட சுற்றுலாவின்போது,  தாய்லாந்து மற்றும் கம்போடியாவுக்கும் இவர் விஜயம் செய்யவுள்ளார்.

பர்மாவுக்கான விஜயத்தை இதுவரையில் மேற்கொண்டுள்ள அதி சிரேஷ்ட அமெரிக்க அதிகாரியாக இராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளின்டன் உள்ளார். இவர் கடந்த 2011ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பர்மாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .