2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஹமாஸ் - இஸ்ரேல் போர்நிறுத்தத்தில் கைச்சாத்து?

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 21 , மு.ப. 03:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

பலஸ்தீனத்தின் ஹமாஸ் படையினருக்கும் இஸ்ரேலுக்கும் இடையில் போர்நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகியுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இந்த உடன்பாட்டைக் கொண்டுவர எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்ஸி கடுமையான முயற்சிகளை மேற்கொண்டிருந்தார். அமெரிக்க ஜனாதிபதி பராக்  ஒபாமாவுடன் எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்ஸி நேற்று தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியிருந்தார்.

பலஸ்தீனியர்கள் மீதான இஸ்ரேலின் அடாவடித் தாக்குதலுக்கு 'வருத்தம்' தெரிவித்த அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா, ஹமாஸ் படையினர் தாக்குதலை விலக்கிக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டதாகத் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

இதற்கிடையில் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர்  ஹிலாரி கிளின்டன், இஸ்ரேலிய ஜனாதிபதியையும் எகிப்திய ஜனாதிபதி முஹம்மது முர்ஸியையும் சந்தித்துப் பேசவுள்ளார்.

ஹமாஸின் உறுப்பினர்களை இஸ்ரேல் உளவுத்துறை படுகொலை செய்துவருவதை நிறுத்தவேண்டும் என்பதும்  காஸா பகுதி மீதான தடைகள் விலக்கிக்கொள்ளப்பட வேண்டும் என்பதும் ஹமாஸ் தரப்புக் கோரிக்கைகளாக இருந்தது.

ஹமாஸின் இராணுவத் தளபதி ஒருவரை இஸ்ரேலியர் படுகொலை செய்ததைத் தொடர்ந்தே இந்தப் போர் மூண்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், நான்கு முக்கிய தீர்மானங்களின் அடிப்படையிலேயே போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவித்துள்ளன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .