2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தோனீஷியாவில் தேர்தல்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 09 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


இந்தோனீஷியாவில்  தேசிய மற்றும் பிராந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான தேர்தல் புதன்கிழமை (09)  நடைபெற்று வருகின்றது.

560 தேசிய நாடாளுமன்ற ஆசனங்கள் உட்பட சுமார் 19,000 ஆசனங்களுக்காக வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

இந்தோனீஷியாவில்  எதிர்வரும் ஜுலை மாதம் 09ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு வேட்பாளர்களை நியமிக்கக்கூடிய கட்சிகள் எவையென  இத்தேர்தல் தீர்மானிக்குமென்று அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கூடுதல் ஆசனங்களைப் பெறுமென்று எதிர்பார்க்கப்படுகின்றது. இக்கட்சியின் வேட்பாளரான ஜோகோ விடோடோ என்பவர் அடுத்த ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்படலாமென்று  இந்தோனீஷிய பிரஜைகள் பலர்  எதிர்பார்க்கின்றனர்.

இந்தோனீஷியாவானது உலகில் அதிகளவான முஸ்லிம்களை கொண்டுள்ள நாடாகும். அத்துடன், தென்கிழக்கு ஆசியாவில் ஆகவும் கூடிய பொருளாதாரத்தை உடைய நாடாகும்.

இத்தேர்தலில் சுமார் 187 மில்லியன் இந்தோனீஷிய பிரஜைகள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். கிட்டத்தட்ட 22 மில்லியன் மக்கள் முதல் தடவையாக வாக்களிக்கின்றனர்.

வாக்களிப்பை அதிகரிக்கும் வகையில் புதன்கிழமையை (09) பொது விடுமுறையாக இந்தோனீஷியாவில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .