2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவில் போலி அப்பிள் தொழிற்சாலை முற்றுகை

Gopikrishna Kanagalingam   / 2015 ஜூலை 29 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

அப்பிள் நிறுவனத்தின் ஐபோன் தொலைபேசிகளைப் போன்ற, போலியான தொலைபேசிகளை உற்பத்திசெய்து வந்த தொழிற்சாலையொன்று, சீனாவில் முற்றுகையிடப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தொழிற்சாலையிலிருந்து, 41,000 போலி அப்பிள் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகிறது.

போலியான தொலைபேசிகளை, மீளப் பொதியிட்டு, சந்தைக்கு அனுப்பும் பணியில், இங்கு நூற்றுக் கணக்கானோர் ஈடுபட்டு வந்ததாகவும் அறிவிக்கப்படுகிறது.

சீனத் தலைநகர் பீஜிங்கின், வடக்குப் பகுதியில் இந்தத் தொழிற்சாலை இயங்கி வந்துள்ளது

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .