2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பராக் ஒபாமாவை சுட்டுக் கொல்ல முயன்றதாக 21 வயது இளைஞன் மீது வழக்கு

Super User   / 2011 நவம்பர் 18 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வெள்ளை மாளிகையை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்ததன் மூலம் அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கொலை செய்ய முயன்றதாக 21 வயதான இளைஞர் ஒருவர் மீது குற்றம்சுமத்தப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த  வெள்ளைக்கிழமை இடம்பெற்ற இத்துப்பாக்கி பிரயோகத்தினால் எவரும் காயமடையவில்லை. ஜனாதிபதி ஒபாமா, அவரின் மனைவி மிட்செல் ஆகியோர் அவ்வேளையில் வெள்ளை மாளிகையில் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

காரொன்றில் வந்து 8 தடவை துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுவிட்டு இவர் தப்பிச்சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

துப்பாக்கி குண்டொன்று வெள்ளை மாளிகையின் ஜன்னலை தாக்கியது. எனினும் குண்டுதுளைக்காத கண்ணாடியினால் அது தடுக்கப்பட்டது. ஏனைய குண்டுகள் கட்டிடத்தின் வெளிப்பகுதியில் மோதியுள்ளன.

இக்கார் பின்னர் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டது. அதற்குள் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களும் காணப்பட்டன.

கடந்த புதன்கிழமை இன்டியானா நகரில்வைத்து ஒஸ்கார் ஓர்டெகா-ஹேர்னான்டஸ்  எனும் மேற்படி இளைஞர் கைதுசெய்யப்பட்டார்.

பராக் ஒபாமாவை பிசாசு எனவும் கிறிஸ்தவத்திற்கு எதிரானவர் எனவும்  இந்த இளைஞர் கூறியுள்ளார்.

பிட்ஸ்பர்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட இந்த இளைஞரை வாஷிங்டன் நகருக்கு கொண்டுசெல்லுமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இவ்வழக்கில் மேற்படி இளைஞர் குற்றவாளியாக காணப்பட்டால் ஆயுள்தண்டனை விதிக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.



 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .