2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சீனாவில் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வு

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 23 , மு.ப. 08:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

சீனாவின் தென்பகுதியில் கடும் மழை பெய்து வரும் நிலையில் அங்கு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு, மண்சரிவு ஆகியவற்றில் அகப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 33 ஆக உயர்வடைந்துள்ளது.

அத்துடன், இந்த வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவு காரணமாக காணாமல் போனவர்களின் எண்ணிக்கையும் 42 ஆக உள்ளது.

பனாபி சூறாவளி காரணமாக சீனாவின் தென்பகுதியான குவாய்ங்டன் மாகாணத்தில்  கடும் மழை பெய்து வருகிறது.  

78,400 மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறியுள்ள அதேவேளை, ஒரு மில்லியன் மக்கள் பாதிப்படைந்துள்ளதாகவும் அந்த நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சீனாவில் இந்த வருடம் வீசிய சூறாவளி மிகவும் பலமானதாக வீசியதாக சீன நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .