2024 மே 08, புதன்கிழமை

அமெரிக்காவில் 7மாதங்களில் 90வங்கிகள் மூடல்

Menaka Mookandi   / 2010 ஜூலை 12 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில் கடந்த 7 மாதங்களில் 90 வங்கிகள் மூடப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் நிலவிய பொருளாதார நெருக்கடி தற்போது மேம்பட்டுள்ள நிலையிலும் இந்த வங்கிகள் நட்டமடைந்த நிலையிலேயே அவை மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் வேலையின்மைப் பிரச்சினை தற்போது தலையெடுத்துள்ள்தாக கூறப்படுகின்றது. இதனால், வேலையற்றோரின விகிதம் 9 சதவீதத்தைத் தாண்டியுள்ளது.

எதிர்வரும் நாட்களில் மேலும் பல வங்கிகள் மூடப்படும் நிலைக்குத் தள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. 2010ஆம் ஆண்டில் மாத்திரம் அமெரிக்காவில் சராசரியாக ஒரு மாதத்துக்கு 13 வங்கிகள் என்ற அடைப்படையில் மூடப்பட்டுள்ளன. முக்கிய வங்கிகளான ஹோம் நெஷனல், பே நெஷனல் , யு.எஸ்.ஏ , ஐடியா பெடரல் சேவிங்ஸ்  ஆகியவை மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வேலைவாய்ப்பு இன்மை விகிதம் அதிகரிப்பதே சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் நட்டமடைவதற்கான  முக்கியக் காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, கடந்த ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் மொத்தமக 140 வங்கிகள் மூடப்பட்டன. இதேநிலை தொடர்ந்தால் இந்த ஆண்டு அதைவிடக் கூடுதலான வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X