2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

‘இந்தியாவில் அச்சத்தில் வாழவில்லை’

Editorial   / 2017 ஓகஸ்ட் 11 , மு.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டிலுள்ள சிறுபான்மையினர், பாதுகாப்பின்மையை உணர்கின்றனர் என்ற கருத்தை, இன்று (11), இந்தியாவின் குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ள வெங்கய்யா நாயுடு நிராகரித்ததோடு, இது, ‘அரசியல் பிரசாரம்’ என்று கூறினார்.

எவ்வாறாயினும், யாருடைய பெயரையும் குறிப்பிடாத அவர், இந்திய குடியரசுத் துணைத் தலைவர் (நேற்றுடன் நிறைவடைந்த) ஹமிட் அன்சாரி கூறிய கருத்துக்கு பதில் தரும் வகையிலேயே, கருத்துத் தெரிவித்திருந்தார்.

“சிறுபான்மை மக்கள், பாதுகாப்பற்று வாழ்வதாக, சிலர் கூறுகின்றனர். அது, அரசியல் பிரசாரமாகும். உலகிலுள்ள அனைத்து நாடுகளும் ஒப்பிட்டு பார்த்தால், இந்தியாவிலுள்ள சிறுபான்மையின மக்கள், மிகவும் பாதுகாப்பாகவே இருக்கின்றனர் என்பதோடு,  அவர்களுக்குத் தேவையானவற்றை, அவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்” என்று அவர் கூறினார்.

“சகிப்புத் தன்மையின்மை வளர்ந்து வருகின்றது என்பதை ஏற்றுக்கொள்ளமாட்டேன்” என்று கூறிய அவர், இந்திய சமூதாயமே, உலகிலேயே மிகவும் சகிப்புத் தன்மை வாய்ந்தது என்றும் காரணம், இங்கு நாகரிகமாக மக்களே வாழ்கின்றனர் என்றும் அவர் கூறினார்.

சகிப்புத் தன்மை என்ற ஒன்று இருப்பதாலேயே, ஜனநாயகம் வெற்றிகரமாகச் செயல்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

“ஒரு தனிச் சமூகத்தை நீங்கள் தனித்துக் காட்டினால், ஏனைய சமூகங்கள், அதனை தவறாக எடுத்துக்கொள்ளும். அதனால்தான், அனைத்துச் சமூகங்களும் சமம் என்று நாங்கள் கூறுகின்றோம்.

நீங்கள், ஒரு சமூதாயத்திலிருந்து தனித்து நின்றால், மற்றைய சமூதாயம், வேறுவிதமாகவே எடுத்துக்கொள்ளும்.

“சிறுபான்மையினருக்கு எதிராக எந்தவொரு பாகுபாடும் கிடையாது என்பதை, வரலாறே நிரூபிக்கின்றது. அவர்கள் (முஸ்லிம்கள்), அரசமைப்பு பொறுப்புக்கள் உள்ளிட்ட முக்கிப் பதவிகளை வகிக்கின்றனர். காரணம், இங்கு பாகுபாடு இல்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அரசியல் தலைவர்கள் காரணமாக, இந்திய மதச் சார்பற்றது என்று கூற முடியாது என்று கூறிய அவர், மக்கள், நாகரிகமாக உள்ளனர் என்பதாலேயே, நாடு , மதச்சார்பற்று காணப்படுகின்றது என்றும் அவர் கூறினார்.

 

 

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .