2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இன்னமும் அச்சத்தில் ஈரான்

Editorial   / 2017 நவம்பர் 15 , மு.ப. 12:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈரானைத் தாக்கிய 7.3 றிக்டர் அளவிலான பலமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, தொடர்ந்து 2ஆவது நாளாகவும் அப்பகுதி மக்கள், கட்டடங்களுக்குள் தங்காது, திறந்த வெளியில் தங்கினர். அப்பகுதியில், இன்னமும் பதற்ற நிலையே காணப்படுகிறது.

ஈரான் - ஈராக் எல்லையில், இலங்கை நேரப்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை பின்னிரவு 11:48 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக, ஈரானில் 413 பேர் பலியானதோடு, 6,700 பேர் காயமடைந்தனர். ஈராக்கில் 8 பேர் பலியானதோடு, சில நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.

ஈரானில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, 22,000 தற்காலிகக் கூடாரங்களும், 52,000 போர்வைகளும், தொன் கணக்கான உணவும் தண்ணீரும் விநியோகிக்கப்பட்டுள்ளன என, அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.

ஈரானிலும் சரி, ஈராக்கின் குர்திஷ்தான் பிராந்தியத்திலும் சரி, கடுமையான குளிர் நிலவுகின்ற போதிலும், திறந்த வெளியிலேயே மக்கள் தங்கியிருந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு விஜயம் செய்த ஈரானிய ஜனாதிபதி ஹஸன் றௌஹானி, இந்த அனர்த்தம் காரணமாக வீடுகளை இழந்தோருக்கு, துரிதமான முறையில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுக்க, அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமெனத் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .