2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

குல்பூஷண் ஜாதவ் விவகாரம்: ‘கண்ணைக்கட்ட பாகிஸ்தான் முயற்சி’

Editorial   / 2017 ஜூலை 17 , பி.ப. 10:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தியக் கடற்படையின் முன்னாள் அதிகாரியான குல்பூஷண் ஜாதவின் வழக்குத் தொடர்புடைய போதிய சாட்சியங்கள் இன்மையால், குறித்த வழக்குக்கு, தானே தீர்வு கண்டுெகாள்வற்கு, பாகிஸ்தான் முயன்று வருவதாக, இந்திய பாதுகாப்புத் துறையின் நிபுணர்கள், நேற்று (17) தெரிவித்தனர்.  

பாகிஸ்தானை உளவு பார்த்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில், குல்பூஷண் ஜாதவுக்கு, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றத்தால் மரணதண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டது. எனினும், அவருக்கு வழங்கப்பட்ட தண்டனையை, தீர்ப்பு வரும் வரையில் நிறுத்தி வைக்குமாறு சர்வதேச நீதிமன்றம், கடந்த மே மாதம் உத்தரவு பிறப்பித்தது.  

இது தொடர்பாகக் கருத்து தெரிவித்த, பாதுகாப்புத் துறை நிபுணர், பி.கே சேகல், “ஜாதவ் மீதான வழக்கு, ஒரு போலியான வழக்கு; இராணுவத்தின் விசாரணையும் போலியானது என்பதை, பாகிஸ்தான் அரசாங்கம் நன்றாக அறிந்து வைத்துள்ளது. மேலும், ஜாதவுக்கு எதிராகச் சமர்ப்பிப்பதற்கு, போதுமான சாட்சியங்கள் இல்லை என்பதால், பாகிஸ்தானே, இந்த வழக்கைத் தீர்த்துக்கொள்வதற்கு முயல்கிறது. சர்வதேச நீதிமன்றத்தின் கண்ணைக் கட்டிவிட்டு, பாகிஸ்தானுக்குச் சாதகமான முறையில் தீர்வுகளைப் பெற்றுக்கொள்ள முயல்கிறது” என்று அவர் கூறினார்.  

இவ்வாறான செயல்களை, பாகிஸ்தான் அரசாங்கம் தொடர்ந்துச் செய்யுமாயின், பல்வேறு பகுதிகளில் இருந்து கண்டனம் வெளியிடப்படுவதை பாகிஸ்தான் காணவேண்டி ஏற்படும் என்றும், இதனால், கடினமான சூழ்நிலைகளுக்கு முகங்கொடுக்க நேரிடும் என்றும் அவர் மேலும் கூறினார்.  

​இதேவேளை, உலகின் மிகப்பெரிய பாகமாக, சர்வதேச நீதிமன்றம் காணப்படும் நிலையில், அதைச் சாதாரணமான விடயம் என்று, பாகிஸ்தான் கருதக்கூடாது என்று, பாதுகாப்புத் துறை நிபுணர் பிரபுல் பக் ஷி, கூறியுள்ளார்.  

“ஜாதவினால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம் நிராகரித்தமை, தீவிரமான விடயமாகும்” என்றும் அவர் கூறியுள்ளார்.  

ஜாதவினால் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை, பாகிஸ்தான் இராணுவ நீதிமன்றம், நேற்று முன்தினம் நிராகரித்தது. இனி, 90 நாட்களுக்குள், மற்றுமொரு கருணை மனுவை, பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனுக்கு, ஜாதவினால் சமர்ப்பிக்க முடியும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .