2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சர்வதேச நீதிமன்றத்துக்கு ஆபத்து?

Editorial   / 2018 செப்டெம்பர் 12 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் தொடர்பில், அமெரிக்கர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் முயன்றால், அந்நீதிமன்றம் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமென, ஐக்கிய அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்காலம் குறித்துக் கேள்விகள் எழுந்துள்ளன.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை, “சட்டவிரோத நீதிமன்றம்” என வர்ணித்த, வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜோன் போல்ட்டன், தமது நாட்டின் பிரஜைகளையும் தமது தோழமை நாடுகளின் பிரஜைகளையும் பாதுகாப்பதற்குத் தேவையான எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.

அமெரிக்கப் பிரஜைகள் மீது வழக்குத் தொடரப்படும் வாய்ப்புள்ளது என, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத் தரப்பிலிருந்து செய்தி வெளியானதைத் தொடர்ந்தே, இவ்வெச்சரிக்கை வெளியாகியுள்ளது.

தமது தரப்பால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில், சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகள் மீது தடை விதிக்கப்படுமெனவும், நீதிமன்றத்துக்கான நிதியளிப்பு நிறுத்தப்பட்டு, நீதிமன்றம் அப்படியே செயலிழந்து செல்ல வழியேற்படுத்தப்படுமெனவும், ஜோன் போல்ட்டன் எச்சரித்தார்.

இதேவேளை, இஸ்ரேல் மீது, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினூடாக விசாரணையொன்றை மேற்கொள்வதற்கான முயற்சிகளை மேற்கொண்ட குற்றச்சாட்டில், பலஸ்தீன விடுதலை அமைப்பின் வொஷிங்டன் அலுவலகத்தை மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது எனவும், ஜோன் போல்ட்டன் குறிப்பிட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .