2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சிரிய விமானத்தை வீழ்த்தியது அமெரிக்கா

Editorial   / 2017 ஜூன் 19 , பி.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிரியாவின் றக்கா மாகாணத்தில், சிரிய அரசாங்க விமானமொன்றை, ஐக்கிய அமெரிக்க தாக்குதல் விமானமொன்று சுட்டு வீழ்த்தியுள்ளதாக, இரு தரப்பு அதிகாரிகளும் தெரிவித்துள்ளனர்.   

வடக்கு சிரியாவில், ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கெதிராக போரிடும், அமெரிக்காவினால் ஆதரவளிக்கப்படும் படைகளுக்கு அருகே, விமானம் குண்டுகளைப் போட்டமையைத் தொடர்ந்தே, விமானத்தை வீழ்த்தியதாக, ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணி, நேற்று  (18) தெரிவித்துள்ளது.   

இந்நிலையில், சிரியாவிலுள்ள ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆட்சித் தலைநகரான றக்கா நகரின் அருகே, ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவின் ஆயுததாரிகளுக்கெதிரான மோதல் நடவடிக்கையில் இருந்ததாக, சிரிய இராணுவம் தெரிவித்துள்ளது.   

சிரிய அரசாங்கத்தின் எஸ்.யு 22 விமானமொன்று, தப்காவுக்குத் தெற்காக, இலங்கை நேரப்படி, நேற்று முன்தினம் இரவு 11.13க்கு, சிரிய ஜனநாயகப் படைகளுக்கு அருகில் குண்டுகளைப் போட்டதாகவும், கூட்டணிப் பங்காளிப் படைகளின் தற்காப்பின் அடிப்படையில், அதை, ஐக்கிய அமெரிக்க எஃப்/ஏ-18ஈ சுப்பர் ஹொர்னட் விமானத்தின் மூலம் உடனடியாக சுட்டு வீழ்த்தியதாக, ஒன்றிணைந்த தாக்குதல் படை, அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளது.  

இந்நிலையில், சிரியாவில் போர்புரியும் ஐக்கிய அமெரிக்கா தலைமையிலான கூட்டணியின் விமானங்களை, இலக்குகளாகவே கருதப் போவதாக எச்சரித்துள்ள ரஷ்யா, ஐக்கிய அமெரிக்காவுடனான தொடர்பாடல்களை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .