2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

டெர்னாவில் முன்னேறுகின்றன ஹப்தாரின் படைகள்

Editorial   / 2018 ஜூன் 12 , பி.ப. 09:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

லிபியாவின் கிழக்கிலுள்ள ஆயுததாரிகளின் இறுதியிடமான டெர்னாவின் சில மாவட்டங்களை தாம் கைப்பற்றியுள்ளதா நேற்றுத் தெரிவித்த கலீபா ஹப்தாருக்கு விசுவாசமான படைகள், உடனடியாக டெர்னாவுக்கு விடுதலை கிடைக்கும் எனக் கூறியுள்ளனர்.

லிபிய முன்னாள் ஜனாதிபதி மொஹம்மர் கடாபிக்கெதிரான கிளர்ச்சியைத் தொடர்ந்து கடும்போக்கு ஆயுததாரிகளிடத்தே இருக்கும் டெர்னாவுக்கான வலிந்த தாக்குதல் நடவடிக்கையை கடந்த மாதம் ஏழாம் திகதி ஹப்தாரின் லிபிய தேசிய இராணுவம் ஆரம்பித்திருந்தது.

இந்நிலையிலேயே கருத்துத் தெரிவித்த லிபிய தேசிய இராணுவத்தின் பேச்சாளர் ஜெனரல் அஹ்மட் அல்-மெஸ்மரி, 150,000 பேரளவானோர் இருக்கின்ற டெர்னா நகரத்தின் பெரும்பாலான பகுதியை லிபிய தேசிய இராணுவம் கட்டுப்படுத்துவதாகவும் ஆனால் சிறிய எதிர்ப்புகள் காணப்படுவதாகக் கூறியுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில், மேற்கு டெர்னாவின் பப் டொப்ருக் மாவட்டத்திலுள்ள 6,000 பேருக்கு மனிதாபிமான உதவிகளை வழங்கியுள்ளதாக லிபிய செஞ்சிலுவைச் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தெரிவித்திருந்தது. லிபிய தேசிய இராணுவம் ஏறத்தாழ இரண்டாண்டுகளாக டெர்னாவை முற்றுகையிட்ட நிலையில், அங்குள்ளவர்கள் மனிதாபிமான உதவிகளைப் பெறுவது கடினமாக இருந்தது.

டெர்னா, அல்-கொய்தாவுக்கு நெருக்கமான குழுக்கள் உட்பட இஸ்லாமிய, கடும்போக்குவாத ஆயுதக் குழுக்களின் கட்டுப்பாட்டில் காணப்பட்டிருந்தது. இவர்கள் ஹப்தாருக்கும் ஐ.எஸ்.ஐ.எஸ் ஆயுதக்குழுவுக்கும் எதிரானவர்களாக இருந்திருந்தார்கள்.

டெர்னாவிலுள்ள தனது படைகளுக்கு வெற்றி நெருங்கி விட்டதென இம்மாதம் நான்காம் திகதி ஹப்தார் தெரிவித்திருந்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .