2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

தாய்வானில் மீண்டும் அதிர்வுகள்

Editorial   / 2018 பெப்ரவரி 09 , மு.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

தாய்வானில் ஏற்பட்ட பலமான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ள மீட்புப்படை வீரர்கள், தொடர்ந்து ஏற்பட்டுவரும் அதிர்வுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்படுகிறது.

இலங்கை நேரப்படி நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட 6.4 றிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில், குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதோடு, 265 பேர் காயமடைந்திருந்தனர். மேலும், காணாமல் போன 58 பேரைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஆனால், பாரிய நிலநடுக்கத்தின் பின்னர், இலங்கை நேரப்படி நேற்றுக் காலை வரை, 200க்கும் மேற்பட்ட அதிர்வுகள், அப்பகுதியில் ஏற்பட்டுள்ளன. இதில், 5.7 றிக்டர் அளவிலான அதிர்வொன்றும் உள்ளடங்குகிறது. நேற்றைய தினமும், அதிர்வுகள் தொடர்ந்த வண்ணமுள்ளன.

ஏற்கெனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்கள், இந்த அதிர்வுகள் காரணமாக, வீடுகளில் தங்காமல், வெளிகளில் தங்குவதையே விரும்புகின்றனர் என, சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போனவர்களை மீட்கும் பணி தொடர்ந்துவரும் நிலையில், காணாமல் போனவர்களில் அநேகமானவர்கள், 45 பாகையில் சரிந்து காணப்படும், 12 மாடிக் கட்டடத்திலேயே சிக்கியுள்ளனர் எனக் கருதப்படுகிறது. கடினமான அந்த மீட்புப் பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகிறது என அறிவிக்கப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .