2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

பிரெக்சிற் பேச்சுகள் ஸ்தம்பிக்கும் நிலை?

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து ஐக்கிய இராச்சியம் விலகுவதற்கான (பிரெக்சிற்) பேச்சுவார்த்தைகள், ஸ்தம்பிக்கும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளன. இரண்டு தரப்புகளுமே, பேச்சுவார்த்தைகள் தொடர்பான தெளிவான நிலைப்பாட்டை, உறுதியுடன் வெளிப்படுத்தாத நிலையிலேயே, இவ்வாபத்து ஏற்பட்டுள்ளது.

முன்னதாக, பிரெஞ்சுப் பத்திரிகையொன்றுக்குக் கருத்துத் தெரிவித்த, ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதம பேரம்பேசுநர் மைக்கல் பார்னியர், பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் அப்படியே தோல்வியடையக்கூடிய சந்தர்ப்பத்துக்கும் தயாராக இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.

முக்கியமான விடயங்களில் தெளிவை வழங்குவதற்காக, ஐக்கிய இராச்சியத்துக்கு 2 வாரங்கள் என்ற காலக்கெடுவை அவர் வழங்கிய பின்னரே இவ்வாறு தெரிவித்திருந்தார்.

அதில் முக்கியமான பிரச்சினையாக, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கு, ஐக்கிய இராச்சியம் எவ்வளவு பணம்தை வழங்கத் தயாராக இருக்கிறது என்ற விடயத்தை வெளிப்படுத்த வேண்டுமென்பது, ஐ.ஒன்றியத்தின் கோரிக்கையாக இருக்கிறது.

இந்நிலையில் கருத்துத் தெரிவித்துள்ள, ஐ.இராச்சியத்தின் பிரெக்கிற் அமைச்சர் டேவிட் டேவிஸ், ஐ.ஒன்றியத்துக்கு எவ்வளவு பணத்தை வழங்க வேண்டுமென்பதை, அந்நாடு வெளியிடாது எனக் குறிப்பிட்டார். எனவே, பேச்சுவார்த்தைகளை முன்னகர்த்துவதற்கு அந்நாட்டுக்குக் காணப்படும் வாய்ப்புத் தட்டிப் போகக்கூடிய வாய்ப்புகள் உள்ளன.

எதிர்கால வர்த்தக உறவுகள் தொடர்பான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்கான காலக்கெடுவாக, டிசெம்பர் மாதமே காணப்படும் நிலையில், அடுத்ததாக என்ன நடக்குமென்பது, தெளிவில்லாத நிலையிலேயே காணப்படுகிறது.

கடந்தாண்டு ஜூன் மாதத்தில் நடைபெற்ற பிரெக்சிற் வாக்கெடுப்பைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகளுக்கான காலம், இவ்வாண்டு மார்ச் 29ஆம் திகதி ஆரம்பித்தது. பேச்சுவார்த்தைகள் உத்தியோகபூர்வமாக, ஜூன் 19ஆம் திகதி ஆரம்பித்தன.

ஆனால், பேச்சுவார்த்தைகளில் போதியளவு முன்னேற்றம் காணப்படவில்லை என்பதை, இரு தரப்புகளும் ஏற்றுக் கொண்டுள்ளதோடு, அந்நிலை தொடர்பில் இரு தரப்புகளுமே தங்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .