2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

மியான்மார் செல்கிறார் டிலெர்ஸன்

Editorial   / 2017 நவம்பர் 14 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் றெக்ஸ் டிலெர்ஸன், மியான்மாருக்கான விஜயமொன்றை மேற்கொண்டு, நாளை அங்கு செல்லவுள்ளார். மியான்மாரின் ராக்கைன் மாநிலத்தில் இடம்பெறும் நெருக்கடி நிலைமைக்கு மத்தியில் இடம்பெறும் அவரது இவ்விஜயம், அதிக எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கத்தேய நாடுகளின் ஆதரவைப் பெற்ற ஆங் சாங் சூ கியின் அரசாங்கம், ராக்கைனில் றோகிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்தத் தவறிவிட்டது எனவும், இராணுவத்தினருக்கு இவ்விடயத்தில் ஆதரவு வழங்குகிறது எனவும், பரவலாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது.

இதைத் தொடர்ந்து, அந்நாட்டு இராணுவ அதிகாரிகள் மீது, தடைகள் விதிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இந்நிலையிலேயே, மியான்மாருக்குச் செல்லவுள்ள டிலெர்ஸன், ஆங் சாங் சூ கியைச் சந்திக்கவுள்ளாரென அறிவிக்கப்படுகிறது.

அதேபோல், இராணுவத்தின் பிரதம தளபதியையும், டிலெர்ஸன் சந்திக்கவுள்ள நிலையில், ராக்கைன் தொடர்பில் அழுத்தங்கள் வழங்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

ராக்கைனிலிருந்து இதுவரை, 600,000க்கும் மேற்பட்ட றோகிஞ்சா முஸ்லிம்கள், பங்களாதேஷுக்கு இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .