2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கோல் மழை பொழிந்த சென்.மேரிஷ்

Kogilavani   / 2015 பெப்ரவரி 04 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

- குணசேகரன் சுரேன்

அரையிறுதியாட்டத்தில் 11 கோல்களை அபாரமாக அடித்து கோல் மழை பொழிந்த சாதனையை நாவாந்துறை சென்.மேரிஷ் அணி செவ்வாய்க்கிழமை (03) உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நிகழ்த்தியது.


சென்.மைக்கல் விளையாட்டுக்கழகம் நடத்தி வரும் அணிக்கு 7 பேர் கொண்ட கால்ப்பந்தாட்ட சுற்றுப்போட்டி உரும்பிராய் இந்துக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்று வருகின்றது.


30 அணிகள் பங்குபற்றுகின்ற இச்சுற்றுப்போட்டியின் முதலாவது அரையிறுதியாட்டம் செவ்வாய்க்கிழமை (03) நாவாந்துறை சென்.மேரிஷ் அணிக்கும் நவிண்டில் கலைமதி அணிக்கும் இடையில் இடம்பெற்றது.


போட்டி ஆரம்பித்த அடுத்த நிமிடத்திலேயே சென்.மேரிஷ் அணி, அதிரடியான கலக்கல் ஆட்டம் ஆடியது. அவ்வணி அடுத்தடுத்து 4 கோல்களைப் போட்டது. பதிலுக்கு கலைமதி அணி 1 கோலைப் போட்டது. முதல் பாதியாட்டத்தில் சென்.மேரிஷ் அணி 4:1 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.


இரண்டாவது பாதியாட்டம் முழுமையாக சென்.மேரிஷ் அணியின் பக்கம் வீழ்ந்தது. வீரர்கள் ஒருவர் மாறி ஒருவர் கோல் மழை பொழிந்து அடுத்தடுத்து 7 கோல்களைப் போட்டனர்.


சென்.மேரிஷ் அணி 11:01 என்ற கோல் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.


சென்.மேரிஷ் அணி சார்பாக அருள்ராசா யூட் 4, கிறிஸ்தோபர் ஜக்ஸன் 3, மரியதாஸ் நிதர்சன் 2, அன்ரனி அன்ரன் சாள்ஸ் 1, பிரேமானந்தன் ஜெனட் 1 கோல்களைப் பெற்றுக்கொடுத்தனர்.


குருநகர் பாடும்மீன் அணிக்கும் ஊரெழு றோயல் அணிக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதியாட்டம் வியாழக்கிழமை (04) நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .