2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

ஈனனுடனோர் இலக்கியச் சமர்

A.P.Mathan   / 2012 டிசெம்பர் 13 , பி.ப. 02:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஈனனுடனோர் இலக்கியச் சமர்

காழ்ப்புணர்வு கொண்டொருவன் கதறினான் அந்தகோ
          காவியங்கள் படைப்பதனைக் கீழ்மையென் றோதினான்
வாழ்வினிலோர் வெற்றியையும் வரித்திலன் நலமென
          வையகமத் இல்லையெனில் வரிப்பனோ காதைகள்
கீழ்மகனின் பேச்சினையார் கருத்தினில் கொள்வரோ
          கையறுநி லையிலவன் கூக்குரல் செய்கிறான்
பாழ்பட்ட மனத்தினன் புத்திதடு மாறிய
          பிதற்றலினைக் அறிந்துநான் பாவமென் றெண்ணினேன்

காலத்தா லழியாத கோன்மைகொண் டுள்ளவை
          காவியங்கள் தானறிவாய் கீழ்மதிப் பித்தனே
ஞாலத்தில் நிலைப்பதுன் நரகத்துச் சால்வையோ
          சீலமிலா வுன்றனது சேதிகள் செப்பவோ
ஆலத்தை உண்டனைநீ ஆழத்தை அறிகிலாய்
          அடிவரையும் உதறுவேன் அறிந்துளேன் அனைத்தையும்
பாலுணர்வுப் பசிகொண்ட பச்சோந்தி மிருகமே
          பண்ணவனின் எதியுனைநான் பந்தாடு வேனறி

நாடுபல வென்றனது நற்றமிழை ஓர்ந்ததால்
          நாடினராம் பட்டங்கள் நல்கிடவே நானவை
தேடாது பெற்றவைகள் தெளிந்திடு மூடனே
          தமிழறிஞர் பலர்கூடித் தேர்ந்தளித்தார் தேர்ந்திடு
கூடாதே யுன்கரமக் கோன்மையின் தேறல்கள்
          கடைப்பிறப்பின் கடைமகனே கேளடா சொல்லுவேன்
தேடியென்றன் காவியங்கள் திறனாய்வு செய்பவர்
          தொகைநீளும் முனைவர்களும் சேர்ந்துளார் கொள்ளையே

மலைநோக்கிக் குக்கல்வாய் மொழிந்திலென் அஃதுபோல்
          நிலையுன்றன் நிலையின்று நான்மலை தானடா
சிலையினில் முட்டியுன்றன் சிரசினை அழிப்பயோ
          சொல்லடாநீ செய்ததென்ன தமிழுக்கு ஈனனே
எழுவானின் கதிரொக்கும் என்றமிழ்ப் படைப்புக்கள்
          எச்சிலையின் யாசகன்நின் எழுத்துக்கள் திருட்டுகள்
கொழுவாதே என்னிடமுன் கைகொண்ட சரக்கினை
          கட்டவிழ்த்து விட்டனெனின் கைச்சேதம் தேர்ந்திடு

-காப்பியக்கோ ஜின்னாஹ் ஷரிபுத்தீன்

You May Also Like

  Comments - 0

  • முஸ்டீன் Tuesday, 18 December 2012 05:44 AM

    மிஸ்டர் கும்பா நீங்க இலக்கிய சர்ச்சைக்கு வலு சேர்க்க வந்தவர் போலத் தெரியவில்லை, ஜின்னாவின் மீது காழ்புனர்வு கொண்டு வம்பளக்க வந்த குண்டர் போலத் தெரிகிறது,
    மங்கம்மா சபதம் என்றால் என்ன? மாரியாத்தா சபதம் என்றால் என்ன? ஜின்னா நிறையவே எழுதியிருக்கிறார்,
    01. அது சரி ஜின்னாவின் சிறுகதைத் தொகுதிக்கு எதாவது பரிசு கிடைச்சிருக்கா?
    02. வேலைக்கு ஆகாது என்று ஹனிபா தரப்பு சொல்லுகின்ற காப்பியங்களுக்கு பரிசு கிடைச்சிருக்கா?
    03. இந்த வேலைக்காகாத காப்பியங்களை எங்கேனும் யாரேனும் ஆய்வு செய்கிறார்களா?
    04. ஹனிபாவின் படைப்புலகம் பற்றியும் யாராவது தகவல் தாருங்களேன்

    - முஸ்டீன் -

    Reply : 0       0

    Trichy Syed Thursday, 28 February 2013 03:05 PM

    கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் உணர்வுகள் நியாயமானவேயே! கோபமும் ரோஷமும் நேர்மையாளர்களிடம் மட்டுமே உள்ளவை... கம்பீரமான கவிஞர் ஜின்னாஹ் ஷரிபுத்தீன் அவர்களின் கோபத்தை மதிக்கிறேன்...

    Reply : 0       0

    நாச்சியாதீவு பர்வீன் Wednesday, 09 January 2013 01:22 AM

    எப்போது ஓர் எழுத்தாளன் தனது சக எழுத்தாளனை கேவலப்படுத்த முயற்சிக்கின்றானோ அப்பவே அவனிடம் சரக்கு தீர்ந்து போய்விட்டது என்று அர்த்தம். ஓர் எழுத்தாளன் ஓடும் நதிபோல எப்பவும் சுறுசுறுப்பாக இருக்கவேண்டும். மாறாக தேங்கி நின்று விட்டால் கூவம் போல நாறி நாத்தமெடுத்துவிடும். இங்கே ஜின்னா ஓடிக்கொண்டு இருக்கிறார், சால்வை தேங்கி விட்டது அம்பட்டுதான்.

    நாச்சியாதீவு பர்வீன்

    Reply : 0       0

    al qamar Tuesday, 18 December 2012 08:33 PM

    எம்.எச்.எம்.ஷம்ஸின் நினைவுக் கூட்டத்தில் ஹனிபா எப்படி நடந்து கொண்டார் என்பதை அஸ்ரப் ஷிஹாப்தீனிடம் கேளுங்கள் சொல்லுவார், நான் சொல்லத் தேவையில்லை

    மக்கள் பெயரால் கிடைத்த பஜரோவை வட- கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருக்கும் போதே விற்றுச் சாப்பிட்ட ஆசாமி, (பிரசித்தமான கல்லூரியில் இருந்து வீட்டுக்குப் பெயிண்ட் கொண்டு போன கதையும் வேறையா இருக்கிறது அதெல்லாம் இப்ப வேணாம்

    இயக்குநர் வெற்றிமாறனிடம் சொல்லி ஆனக்கத படம் எடுக்கப் போறாறாம் ஹனிபா, அதையாவது சொல்லிக் கொண்டே இருக்காம செய்யட்டும் டிஸ்டர்ப் பன்ன வேண்டாம்.

    முஸ்டீன் தங்களைத் தயவாய் வேண்டிக் கேட்கிறேன், இத்தோடு இதை விட்டுவிடுங்கள், நல்ல எழுத்து வீச்சு வெளிப்பட நிறைய எழுதுகின்றீர்கள், போய் அதைச் செய்யுங்கள், முடிந்தால்இதை வைத்து ஒரு கதை எழுதுங்கள்

    அல்லது நீங்கள் எழுதிய சோலைக்கிளி - அஷ்ரப் ஷிஹாப்தீன் முரன்பாடு போல அருமையான ஒரு பத்தி எழுதுங்கள், அதற்கு ஜின்னா-ஹனிபா முரண்பாடு என்று தலைப்பு வைத்துவிடலாம்,

    தயவு செய்து இத்தோடு விட்டுவிடுங்கள்.

    Reply : 0       0

    al qamar Tuesday, 18 December 2012 08:32 PM

    கும்பா என்ற பெயரில் ஒழிந்து கொண்டு ஒரு படைப்பாளியைக் கேவலப்படுத்தும் ஆசாமியைக் கண்டுபிடித்தாயிற்று, முஸ்டீன் இவர்களுக்குப் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல் உங்கள் வேலையைப் பாருங்கள், இப்படிப்பட்ட ஆசாமிகளுக்கு ஜின்னாவின் கவிதை ஒன்றே போதும்.

    முஸ்டீன்! ஹனீபாவைக் காயல்பட்டனத்தில் நடந்த இலக்கிய மாநாட்டில், நீங்கள்தானே இழுத்துக் கொண்டு திரிந்தீர்கள், (வளர்த்த நாய்க்குட்டியைப் போல) அப்போது ஏன் இந்த ஆளுடன் சகவாசம் வைத்திருக்கிறீர்கள் என்று கேட்டபோது நீங்கள் எனக்குச் சொன்ன பதில் மறந்துவிட்டதா?

    விட்டுத் தள்ளுங்கள், நீங்கள் சொன்னது போல ஹனீபா நல்ல வாசகன் ஆனால் எழுத்தாளன் கிடையாது, (கடிதம் மட்டும் நல்லா எழுதுவார்) பண்பு தெரியாது, மற்றவர்களை மதிக்கத் தெரியாது,

    Reply : 0       0

    Gunba Tuesday, 18 December 2012 03:34 PM

    எஸ் எல் எம் இப்போது " பட்டானிச்சூ காப்பியம்" படைக்கத் தொடக்கியுள்ளர். அதற்கு 2012 ஆண்டுக்கான சாஹித்திய விருது கிடைக்குமா?

    Reply : 0       0

    Roshan Tuesday, 18 December 2012 10:27 AM

    இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நடத்திய நாவற்குழியூர் நடராசன் கவிதைப் போட்டி (1996), 1ம் பரிசு
    வடகிழக்கு மாகாண சாகித்திய மண்டலப் பரிசில் 'புனித பூமியிலே' காவியம் (1998)
    யாழ் இலக்கிய வட்டப் பேரவைப் பரிசில் (1998) புனித பூமியிலே காவியம்
    தினகரன் பத்திரிகை, மலையக இலக்கியப் பேரவை இணைந்து நடத்திய அகஸ்தியர் நினைவுச் சிறுகதைப் போட்டி (2000), 2ம் பரிசு
    கலாசார அமைச்சு, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இணைந்து நடத்திய மிலாத் சிறுகதைப் போட்டி (2001), 1ம் பரிசு
    யாழ். இலக்கிய வட்டப் பேரவைப் பரிசில் (2002) 'ஜின்னாஹ்வின் இரு குறுங் காவியங்கள்'
    கொழும்புத் தமிழ்ச்சங்கப் பரிசில் (2005), பண்டார வன்னியன் காவியம்
    தேசிய சாஹித்திய மண்டலப் பரிசில் (2005), பண்டார வன்னியன் காவியம்
    யாழ் இலக்கிய வட்டப் பேரவைப் பரிசில் (2005), பண்டார வன்னியன் காவியம்
    யாழ் இலக்கிய வட்டப் பேரவைப் பரிசில் (2008), திருநபி காவியம்

    Reply : 0       0

    Roshan Tuesday, 18 December 2012 10:26 AM

    மஹ்ஜபீன் காவியம். புனித பூமியிலே காவியம் ஆகிய இரு காவியங்களும் இந்திய தமிழ் நாட்டின், வேலூர் மாவட்ட மேல்விசாரம் அப்துல் அக்கீம் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் எஸ். முகம்மது அலி அவர்களால் ஈழக் கவிஞர் ஜின்னாஹ் சரீபுத்தீன் இரட்டைக் காப்பியங்கள் ஓர் ஆய்வு என்ற தலைப்பில் ஆய்வுசெய்யப்பட்டு சென்னைப் பல்கலைக்கழகத்தில் 2006ல் டாக்டர் பட்டம் பெற்றார்
    சென்னை புகுக்கல்லூரி மாணவர் வேணுகோபால் பெற்றமனம் சிறுகதைத் தொகுதியை ஆய்வுசெய்து எம்.பில். பட்டம் பெற்றார்.
    செல்வி எஸ்.எச்.நஉமியா பேகம் காவியங்களை ஆய்வுசெய்து சிறப்புக் கலைமானிப் பட்டம் பெற்றார்.

    Reply : 0       0

    Abu sama Tuesday, 18 December 2012 08:48 AM

    மக்கத்துச் சால்வயால் முகம் மறைத்துத் தூங்குவதைத் தவிர வேரென்ன செய்ய முடியும் ஹனிபா காக்கா

    Reply : 0       0

    Gunba Tuesday, 18 December 2012 08:00 AM

    ஒருவரின் படைப்பின் அளவைப் பொறுத்தல்ல அவர் மதிக்கப்படுவது அவற்றின் தரத்தைப் பொறுத்தேயாம். எஸ்.எல்.எம்.முக்கு ஒரு மக்கத்துச் சால்வை. உமாவுக்கு அரசனின் வருகை, ரஞ்சகுமாருக்கு கோசலை....யானை ஒரு குட்டி தான் ஈனும் ஆனால் பன்றி ...

    Reply : 0       0

    முஸ்டீன் Tuesday, 18 December 2012 06:11 AM

    கும்பர் கூட்டத்திற்கு இன்னும் புரியல்ல போல..

    Reply : 0       0

    முஸ்டீன் Tuesday, 18 December 2012 05:54 AM

    தம்பி குரோதமாக ஏனப்பா சிந்திக்கிறாய்? கீழே ஜின்னாவின் லிஸ்டப் பார்த்தேல்ல. உம்மால சொல்ல முடியாததையெல்லாம் பலர் பட்டியல் போடுகிறார்கள்,
    ஜின்னாவின் கதைகளைப் படித்துவிட்டாவது கருத்துச் சொல்ல வேணாமா?
    குறைந்தபட்சம் வெளியீடுகளையாவது பார்க்க வேணாமா?
    சரி சரி சின்னப்பயல் தெரியாத்தனமா பேசிட்டான்னு மன்னிச்சிடுவோம் வாசகர்களே.
    பொழச்சுப் போப்பா....

    முஸ்டீன்

    Reply : 0       0

    Gunba Friday, 14 December 2012 04:07 AM

    அடிமுடி தெரியாத வாசகர்கள் விளங்கிக் கொள்ளவதற்கு தகவம் பரிசளிப்பு விழாவில் எஸ் எல் எம். ஹனிபா ஆற்றிய உரையின் சில பகுதிகள். இவை ஜின்னாவின் கவிதையை விளங்கிக் கொள்ள துணைபுரியும் :

    "..... இப்பொழுதெல்லாம் யாரும் காப்பியம் படைப்பதில்லை. ஆனாலும் நமது நாட்டில் காப்பியம் படைப்பதற்கென்றே சிலர் இருக்கிறார்கள். ஐம்பது வருடங்களுக்கு முதல் தமிழ் நாட்டில் யாராவது ஒருவர் மூன்றாந்தர, நாலாந்தர நாவலை எழுதி வெளியிட்டால், அந்த நாவலை அப்படியே தமிழில் காப்பியமாக வடிக்கும் அபத்தம் இங்குதான் நிகழ்கிறது. அதற்குப் போய் சாகித்திய மண்டல விருதும் வழங்குகிறோம். பல கோடி மக்கள் வாழும் தமிழ் நாட்டில் கூட காப்பியத்திற்கு யாரும் எந்த விருதும் வழங்குவதில்லை. காப்பியத்திற்கான விடயதானமாவது சொந்தச் சரக்காக இருக்க வேண்டுமல்லவா? கடந்த இரண்டு மூன்று வருடங்களாக இந்த அபத்தம் ஈழத்து இலக்கிய உலகில் இடம்பெற்று வருகின்றது. இது ஹைக்கூ காலம். காப்பியம் படிப்பதற்கு உண்மையிலேயே யாருக்காவது நேரமிருக்கிறதா? அப்படிப் படித்துப் பரவசமடைந்த ஒரு வாசகனையாவது காண முடிகிறதா? காப்பியம் பற்றி யாராவது பேசுகிறார்களா?

    Reply : 0       0

    musdeen Monday, 17 December 2012 04:03 PM

    முகம் காட்டாத குன்பா ,கல் இல்ல மல்டி பெறல் கொண்டு அடித்தாலும் இந்த வீடு தாங்கும் .

    Reply : 0       0

    nila Monday, 17 December 2012 02:53 PM

    என்னுடைய தேடலின்படி ஜின்னாவின் படைப்புலகம்
    01.முத்து நகை 1989
    02. பாலையில் வசந்தம் 1989
    03. மஹ்ஜபீன் காவியம் 600 பாடல்கள் 1992
    04. புனித பூமியிலே காவியம் (1000பாடல்கள்)1998
    05. பனி மலையின் பூபாளம் -மலையக்க கவிதை தொகுதி 1995
    06. கருகாத பசுமை (புதினம்) 2000
    07. ஜின்னாவின் இரு குருங்காவியங்கள் 2001
    08. கடலில் மிதக்கும் மாடி வீடு - சிறுவர்பாடல் -2002
    09. அகப்பட்ட கள்வன்- சிறுவர்படக்கதை - 2003
    10. பெற்றமனம் - சிறுகதைகள் 2003
    11.எங்கள் உலகம் - சிறுவர்பாடல்
    12. பண்டார வன்னியன் காவியம் - 1500 பாடல்கள் 2005
    13. திருநபிகாவியம் - 2006
    14.திருமறையும் நபிவழியும் - 2007
    15. வேரறுந்த நாட்கள் - சிறுகதைகள் 2008
    16. ராகுலுக்கு ஒரு புது வண்டி - 2008
    17.சிறுமியும் மந்திரக் கோலும் - 2010
    18. தீரன் திப்பு சுல்தான் காவியம் 1600 பாடல்கள் - 2010
    19. அன்பின் கருனையின் பேரூற்று மொழிமாற்றக் கவிதைகள் 2010
    20. வாத்தியார் மாப்பிள்ளை காவியம் 2011
    21. கேள்வியும் பதிலும் (ஜவாபே ஷிக்வா)- 2012

    Reply : 0       0

    Gunba Monday, 17 December 2012 02:45 PM

    ஜின்னாவின் காப்பியம் தவிர்ந்த படைப்புகளின் பட்டியல்:

    1. ஜின்னாவுக்கு இப்போது சிறுகதை படைக்கும் ஆசை ஏற்பட்டுள்ளது."மங்கம்மா சபதம்"...போன்ற சில மோசமான (1920 காலகட்டத்து ) சிறுகதைகளை (?)எழுதுகின்றார்.

    2.

    Reply : 0       0

    Roshan Monday, 17 December 2012 12:40 PM

    12. பண்டார வன்னியன் காவியம் 2005 (1570 பாடல்கள்)
    13. திருநபி காவியம் 2006
    14. திருமறையும் நபிவழியும் (கவிதைத் தொகுப்பு) 2007
    15. வேரருந்த நாட்கள் (சிறுகதைத் தொகுப்பு) 2008
    16. சிறுமியும் மந்திரக் கோலும் (சிங்களம், தமிழ், ஆங்கிலம்) - சிறு.இல்க்கியம்
    17. தீரன் திப்பு சுல்தான் காவியம் (1700 பாடல்கள்)
    18. அன்பின் கருணையின் பேரூற்று (டாக்டர் ஏ.சீ. எஸ். ஹமீதின் கவிதைகள்) மொழிபெயர்ப்பு
    19. மகாகவி இக்பாலின் சிக்வா ஜபாபே சிக்வா - 2011
    20. வாத்தியார் மாப்பிள்ளை - காவியம் 2011
    21. வல்லுவம் -2012 (கவிதைகள்)

    Reply : 0       0

    Roshan Monday, 17 December 2012 12:40 PM

    01. முத்துநகை (கவிதைத் தொகுப்பு) 1989
    02. பாலையில் வசந்தம் (கவிதைத் தொகுப்பு) 1989
    03. மஹ்ஜபீன் காவியம் (600 பாடல்கள்) 1992
    04. புனித பூமியிலே காவியம் 1998 (1000 பாடல்கள்)
    05. பனிமலையின் பூ பாளம் 1995
    06. கருகாத பசுமை (புதினம்) 2000
    07. ஜின்னாஹ்வின் இரு குறுங் காவியங்கள் 2001
    08. கடலில் மிதக்கும் மாடிவீடு 2002 (சிறுவர. இலக்)
    09. அகப்பட்ட கள்வன் 2003 (சிறுவர் இல)
    10. பெற்றமனம் (சிறுகதைத் தொகுப்பு) 2003
    11. எங்கள் உலகம் (சிறுவர் பாடல்கள்) 2003

    Reply : 0       0

    Gunba Monday, 17 December 2012 11:00 AM

    கண்ணாடி வீட்டில் இருந்து கொண்டு கல்லெறிவது தவறு முஸ்டீன்!!

    Reply : 0       0

    mohamed musdeen Sunday, 16 December 2012 03:47 PM

    அப்படியா சங்கதி, ஒரு கதையா வாழ்த்துக்கள்,

    ஒரு தொகுதின்னு நெனசுட்டன்.

    அப்போ அபாண்டமாக இருக்குமாக்கும்,

    1992க்குப் பொறவு ஒரு ஆயிரம் கதையாவது எழுதித் தள்ளியிருக்க வேணாமா?

    ஏன் டொக்டர் ஜின்னா நீங்க வெறும் காப்பியம் மட்டும்தானா அல்லது தமிழுக்கு வேறு ஏதேனும் செய்ததுண்டா. குறஞ்சபட்சம் யாராவது டொக்டரின் படைப்புகளின் முழுமையான லிஸ்டைத் தாங்கப்பா.

    இலக்கியச் சண்ட புடிக்க தராதரம் பார்க்க வேணாமா?

    Reply : 0       0

    SHANTHA Saturday, 15 December 2012 05:50 PM

    இலக்கியச் சமர் அவசியம்...

    Reply : 0       0

    Gunba Friday, 14 December 2012 10:22 PM

    காப்பியம் தற்காலத்துக்கு அவசியமானதா இல்லையா என ஆக்கபூரமாக கலந்துரையாடுவதை விடுத்து மற்றவர் மீது சேறு பூச முயல்வது தவறு. "//வை.அஹமத் அவர்களின் கதைகளைத்தான் ஹனிபா தனது பெயரில் திருடி வெளியிட்டதாக ஒரு கதையும் அடிபடுகிறது. அதனால்தான் வை.அஹமதுவின் மரணத்தின் பின்னர் ஹனிபாவினால் எழுதமுடியவில்லையென்றும் பேசப்படுகிறது,// என்பது அபாண்டம். எஸ்.எல்.எம்.ஹனிபா கடந்த கிழக்கு மாகான சபை தேர்தல் நடைபெற்ற தருணத்தில் "எனக்கு ஓட்டு போடுங்கோ.." என்ற அற்புதமான சிறுகதையை எழுதினர். அப்போது வை.அஹமது உயிருடன் இல்லையே?

    Reply : 0       0

    mohamed musdeen Friday, 14 December 2012 08:53 AM

    வை.அஹமத் அவர்களின் கதைகளைத்தான் ஹனிபா தனது பெயரில் திருடி வெளியிட்டதாக ஒரு கதையும் அடிபடுகிறது. அதனால்தான் வை.அஹமதுவின் மரணத்தின் பின்னர் ஹனிபாவினால் எழுதமுடியவில்லையென்றும் பேசப்படுகிறது, அதே தகவல் ஜின்னாவின் பாடலிலும் இடமபெற்றுள்ளதையும் அவதானிக்க.

    ஹனிபா காப்பியம் பற்றி மட்டும் பேசியிருக்கலாம் ஆனால் காப்பியக்கோவை வம்பிற்கிழுத்திருக்கத் தேவையில்லை, அது டூமச்
    காப்பியம் சொந்த சரக்கில்லை என்று வேறு தூற்றியது ஓவர்,

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .