2024 மே 08, புதன்கிழமை

அரச இல்லங்களிலிருந்து வெளியேற முன்னாள் எம்.பி.க்களுக்கு உத்தரவு

Super User   / 2010 மே 30 , பி.ப. 12:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வீடுகளில் தங்கியுள்ள முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜாவத்தை பகுதியில் அமைந்துள்ள அரச தொடர்மாடிக் கட்டிடத்தில் தங்கியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்னும் இரண்டு வாரத்துக்குள் அங்கிருந்து வெளியேற வெண்டும் என்று பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம, எம்.எஸ்.செல்லச்சாமி, ரஞ்சித் அலுவிஹார, அமீர் அலி உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 8பேருக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது என்று மேற்படி அமைச்சின் செயலாளர் டி.திசாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இரண்டு வாரக் காலப்பகுதிக்குள்  மேற்படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்மாடிக் கட்டிடத்திலிருந்து வெளியேற வேண்டும் என்று தெரிவித்த அமைச்சின் செயலாளர், அவ்வாறு அவர்கள் அங்கிருந்து செல்லத் தவரும் பட்சத்தில் உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் கூறினார்.

இருப்பினும், மேற்படி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் அந்தக் காலக்கெடுவினை இரண்டு மாதங்களாக அதிகரிக்க முடியும் என்வும் அவர் மேலும் தெரிவித்தார்.

 

   

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X