2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இந்தோனேஷிய விமான நிலையத்தில் இலங்கை பயணிகள் கடும் சோதனை

Super User   / 2010 ஜூன் 01 , பி.ப. 07:35 - 0     - {{hitsCtrl.values.hits}}


பி.எம்.முர்ஷிதீன்

EXCLUSIVE இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்யும் இலங்கைப்பயணிகள் கடும் சோதனைக்கும்,விசாரணைக்கும் உட்படுத்தப்படுகின்றனர் என தமிழ்மிரர் இணையதளத்துக்கு கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜகர்த்தா விமான நிலையத்தில் இந்தோனேஷிய குடிவரவு,குடியகல்வு அதிகாரிகளினால் இலங்கை கடவுச்சீட்டுக்களை வைத்திருக்கும் பயணிகள் மாத்திரம் கடும் விசாரணைக்குட்படுத்தப்படுகின்றனர்.

அண்மையில் வர்த்தக கண்காட்சியொன்றில் கலந்துகொள்வதற்காக 200 பேர்கொண்ட தூதுக்குழுவொன்று இந்தோனேஷியாவுக்கு விஜயம் செய்திருந்தது.

சுமார் ஒரு மணி நேரம் விமான நிலையத்தில் இவர்கள் காத்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக இந்தோனேஷிய அதிகாரிகளிடம் தமிழ்மிரர் இணையதளம் கேள்வி எழுப்பியது.

இலங்கையிலிருந்து தமிழ் அகதிகள் ஆஸ்திரேலியாவுக்கு தப்பிச்செல்வதற்கு ஜகர்த்தாவை ஒரு தளமாகப்பயன்படுத்துகின்றனர் என அவர்கள் கருத்து வெளியிட்டனர்.

எனவேதான் தமிழ் அகதிகளுக்கு மாத்திரம் என்றில்லாமல் இலங்கையின் கடவுச்சீட்டு வைத்துள்ள அனைவரும் கடும் சோதனைக்குட்படுத்தப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக தமிழ்மிரர் இணையதளம் தொடர்ந்தும் செய்தித்தேடலில் ஈடுபட முடிவுசெய்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .