2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வற்வரி குறைப்பு

Editorial   / 2018 செப்டெம்பர் 17 , பி.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

இறக்குமதி செய்யப்படும் துணிகளுக்கான வற்வரி 15 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இன்றிலிருந்து இந்த வற்வரி குறைப்பு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், இதற்கான வர்த்தமானி அறிவித்தலில் அமைச்சர் மங்கள சமரவீர கையெழுத்திட்டுள்ளார்.

இதற்கு முன்னர் இறக்குமதி செய்யப்படும் 1 கிலோகிராம் துணிகளுக்கு 100 ரூபாய்  தீர்வை வரி அறவிடப்பட்டதுடன் 15 சதவீத வற்வரியும்  ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதியிலிருந்து அறிவிடப்பட்டு வந்தது.

எனினும், குறித்த துணி வர்த்தகத்தில் ஈடுபடும் தரப்பினர் முன்வைத்த கோரிக்கைக்கமைய, வற்வரி 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் ஊடாக பொருட்களுக்கான 15 சதவீத வற்வரி விதிக்கப்பட்ட நிலையில், 2002 இலக்கம் 14 இல் உள்ளமைக்கு அமைய,  வரி சட்டம் திருத்தப்பட்டு,  அது இந்த வருடம் ஆகஸ்ட் 16ஆம் திகதியிலிருந்து நடைமுறைப்படுத்தப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .