2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஐ.தே.கவின் 72ஆவது மாநாடு 6ஆம் திகதி நடைபெறும்

Editorial   / 2018 செப்டெம்பர் 03 , மு.ப. 04:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய தேசியக் கட்சியின் 72ஆவது மாநாடு, கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க தலைமையில், கட்சியின் தலைமையகமாக சிறிகொத்தாவில், எதிர்வரும் 6ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெறும்.  

மத வழிபாடுகளுடன், அன்று காலை 9 மணிக்கு மாநாடு ஆரம்பமாகும். கட்சியின் உட்கட்டமைப்பு முறைமையை மறுசீரமைப்பதற்கு ஏற்படுத்தி க்கொள்ளப்பட்ட இணக்கப்பாட்டுக்கு, அங்கிகாரம் பெற்றுக்கொள்வதே மாநாட்டின் பிரதான நோக்கமாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.  

ஐக்கிய தேசியக் கட்சி என்றவகையில், அடுத்த ஜனாதிபதி தேர்தல் வரையிலும் பயணிப்பதற்கான அடிப்படை பற்றிய இணக்கப்பாட்டுடன் கட்சி மறுசீரமைப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்க ப்படவுள்ளது என்றும் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.  

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சிக்கு  

இதேவேளை, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தனது 67ஆவது ஆண்டு நிறைவை மத அனுஷ்டாங்களுடன் நேற்று (02) கொண்டாடியது. நாடுமுழுவதிலும் சமய நிகழ்வுகள் இடம்பெற்றனவென தெரிவித்துள்ள அக்கட்சியின் பொதுச் செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்‌ஷமன் பியதாச, கட்சியின் வருடாந்த பொதுக்கூ ட்டம் இந்த மாத இறுதிக்குள் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .