2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் வேண்டுகோள்

Editorial   / 2020 மார்ச் 11 , பி.ப. 03:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டிற்கு வருகைதரும் நபர்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு இராணுவம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவிவரும் தென் கொரியா, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளிலிருந்து வரும் நபர்கள் கண்காணிப்புக்கு உள்ளாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகளுக்கு சிலரினால் எதிர்ப்பு வௌியிடப்படுவதுடன் அச்சத்தினால் தடைகளும் ஏற்படுத்துவதாக இலங்கை இராணுவம் சுட்டிக்காட்டியுள்ளது.

கண்காணிப்பு நடவடிக்கைகளுக்காக  மட்டக்களப்பு தனியார் பல்கலைக்கழகம் மற்றும் கந்தக்காடு கண்காணிப்பு நிலையங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும் பஸ்களை இடையில் நிறுத்துவதற்கும் தடை ஏற்படுத்துவதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தாலி மற்றும் தென் கொரியாவிலிருந்து 449 பேர் குறித்த மத்திய நிலையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .